பக்கம்:மறைமலையம் 18.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

  • மறைமலையம் -18

முறையிற் கருத்தாய் வளர்த்துக் கல்வி பயிற்றிவருமாறு மட்டும் அவளை வேண்டிக்கொண்டான்.

பிறகு சிறிதுகாலஞ் சென்றபின், அவ்வரசி பின்னுங் கருக்கொண்டு ஓர் ஆண்மகவினை ஈன்றாள், அவ்வழகிய மகனைக் கண்டு அரசன் இதற்குமுன் அடையாத ஒரு பெருங் களிப்பி பினை உள்ளுக்குள் அடைந்தனனாயினும், இது வரையில் தான் அவளது பொறுமையினை அறியச் செய்ததில் அமைதிபெறானாய், முன்னையிலுங் கொடிய சொற்களாலுங் கடிய பார்வையாலுங் காரமான தன் கருத்தை

அறிவிப்பான் புகுந்து, “கிரிசெலா, வ்வழகிய ஆண்

பிள்ளையை ஈன்றமையால் நீ என்னைச் சாலவும் உவப்பித்தனையாயினும், என் குடிமக்கள் இப்பிள்ளை பிறந்ததையறிந்து மனம் உவவாதவர்களாய், எனது சிறந்த அரச மரபில் வராமல் ஓர் ஏழைக் குடியானவன் மரபில்வந்த ஒருவன், யான் காலமானபின், தமக்கு அரசனாயுந் தலைவனாயும் வரப்போவதைப் பற்றி மன எரிவுடன் எங்கும் பழி தூற்றா நிற்கின்றனர். அதனால் அவர்கள் என்னை இவ்வரசியலி னின்றுந் துரத்திவிடுவார்களோவென நினைந்தும் அச்சமுறுகின்றேன். அங்ஙனம் அவர்கள் செய்யாமைப் பொருட்டு, இந்தப் பிள்ளையையும் நான் ஒழித்துவிடல் வேண்டும்! நின்னையும் இங்கிருந்து அகற்றிவிட்டு, என் குடிமக்களின் உள்ளத்திற்கிசைந்த வேறொரு மனையாளையும் யான் மணந்துகொள்ளல் வேண்டும்" என்று நெஞ்சிற் சிறிதும் ஈரமின்றிக் கூறினான்.

இவ் வன்சொற்களைச் செவியேற்ற கிரிசெலாள் நைந்து வருந்தும் உள்ளத்தினளாயினும் பொறுமையின் மாறாத வளாய், “மாட்சிமை நிறைந்த அருட்பெருமானே, தங்களது அரசவுள்ளத்திற்கு எஃது உகந்ததோ அதனையேசெய்து மனவமைத பெறுங்கள்! என்னைப் பெருமைப்படுத்த வேண்டுமென்று ஒருகாலும் நினையாதேயுங்கள்! தங்க ளுள்ளத்திற்கு சைந்தது தவிர, வேறெதுவு வேறெதுவும் யான் விரும்பத்தக்கதும் அன்று உயர்ந்ததும் அன்று!” என விளம்பினள். அதன்பின் சிலநாட் சென்றபிறகு அம்மன்னர் பிரான் முன்னே தன் பெண்மகவுக்குச் செய்தபடியே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/192&oldid=1584908" இலிருந்து மீள்விக்கப்பட்டது