பக்கம்:மறைமலையம் 18.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

  • மறைமலையம் -18

மக்கள் உகந்தவர்களாதலைவிடத் தனக்கு மிக உகந்தவர்கள் அல்லரே! எனப் பகர்ந்து அவர்களை ஆறுதல்பேறச் செய்தனள்.

இனி, இப்பிள்ளைகள் பிறந்த சில ஆண்டுகட்குப் பிறகு, அம்மன்னன் தன் மனைவி கிரிசெலாளின் மனப் பொறுமை யினைக் கடைசியாக ஆராய்ந்துபார்த்து விடுதற்குத் தன் னுள்ளே தீர்மானஞ்செய்து, தன் பக்கத்தே யிருந்தவர்களை நோக்கி, இனிமேல் தான் கிரிசெலாளைத் தன் மனைவியாக வைத்துக்கொள்ளுதல் இயலாதென்றும், அவளைத் தான் L மணந்துகொண்ட காலத்தில் தான் மயங்கிய மூளையுள்ள இளைஞனாயிருந்தபடியால் அங்ஙனந் தான் செய்தது மடமைச் செயலாய் முடிந்ததென்றுந் திறந்து சொன்னான். அதன் பின், தன் குருவுக்குத் தெரிவித்துக், கிரிசெலாளை நீக்கிவிட்டு, வேறோரு மனையாளை ள மணந்துகொள்ள அவரது விடையைப் பெறுதற்குத் தான் முனைவதாகவுங் கூறினான். அதனைக்கேட்ட அவர்கள் அவ்வாறு செய்தல் அடாதெனத் தடுத்தும், அவன் அங்ஙனஞ் செய்துதான் ஆகவேண்டுமென அழுத்திக் கூறினான்.

வேண்டியிருத்தலையும்,

அச்செய்தியைக் கேட்டுத், தான் மறுபடியுந் தன் ஏழைத் தந்தையின் குடிலுக்குங் காணியாட்சிக்குந் திரும்பிச் செல்லவேண்டி யிருத்தலையும், அங்கே தன்னிளமைக் காலத்திற்போலத் தான் மீண்டும் பழைய ஆடுமேய்க்குந் தாழிலை மேற்கொள்ள ள அதனோடு தான் காதலித்துப் பேணிய கணவனோடு வேறோருத்தி மணங்கூடி இன்பம் நுகரப் போவதையும் உணர்ந்து, அருமைப் பெண்மணிகாள்! அம்மாதரசியின் மனப் பொறுமையானது எவ்வளவு கொடுமையான ஆராய்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதை நன்கு நினைத்துப் பாருங்கள்! அவ்வாறிருந்தும், அவள் இதற்கு முன்னே தனக்கு நேர்ந்த இடுக்கண்களையெல்லாந், தோலாத மெய்யொழுக்க மனத்திட்பத்தால் மிதித்து மேல்நின்றது போலவே, இப்போதும் இதனைக் கலங்கா முகத்துடனும் நடையுடனுந் தாங்கிக் காள்ளத் தனதுள்ளத்தை அசையாமல் நிலைநிறுத்திக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/194&oldid=1584924" இலிருந்து மீள்விக்கப்பட்டது