பக்கம்:மறைமலையம் 18.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மறைமலையம் 18

காண்டாட்டத்திற்கென்று ஒப்பனை

செய்யப்பட்ட

அழகியதொரு பெரு மண்டபத்தின்கண்ணே கிரிசெலாள் தன் எளிய ஆடையி லிருந்தபடியே அப்பெண்ணை வரவேற்று, “எம் மனனர்பெருமானுக் கென்று புது மனைவியாக வந்த நுங்கள் வரவு திருவருளால் நல்வரவாகுக, என்று பணிவோடு மொழிந்தாள்.

அங்கே வந்திருந்த செல்வமகளிரெல்லாரும் அரசனை நோக்கிக், “கிரிசெலாளைத் தனியே ஓர் அறையினுள்ளாவது வைத்துவிடுங்கள்! அல்லது அந்நங்கையார் முன் அணிந் திருந்த சிறந்த ஆடை யணிகலன்களை அணிந்துகொண்டு வந்தாவது க் காண்ட ாட்டத்தை ந நடத்தும்படி செய்யுங்கள்! ஏனென்றால் புதிது வந்தவர்கள் முன்னிலையில் அவ்வம்மையார் அத்துணை எழைமையான தோற்றத்துடன் வந்துநின்று பணிசெய்வது நல்லதன்று!” என்று எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியும், அவன் அவர்களது சொல்லுக்குச் சிறிதும் இணங்கிற்றிலன். ணங்கிற்றிலன். எல்லாரும் நாற்காலிகளில் அமர்ந்து வட்டமேசையைச் சூழ்ந்திருக்கக், கிரிசெலாள் தன் எளிய உடையொடு நின்றவண்ணமே அவர்கட்கு வேண்டும் பணியெல்லாஞ் செய்து கொண்டிருந்தாள்.

புதிதுவந்த மணப்பெண்ணைப் பார்த்தவர்களெல்

லாருந் தம்மரசன்செய்த மனைவிமாற்றத்தை வியந்து பேசினர். மற்று, அவர்களெல்லாரையும்விடக் கிரிசெலாளே அதனை மிகவுங் கொண்டாடிப் பேசினள்! அப்பெண் ணுடன் வந்த அவடன்தம்பி, ஆண்டிற் சிறியனாயினும் அறிவிற்பெரியனாய், அவளைத் தன் தமக்கையென்று அறியாமலே, அவள் அரசற்கு ஏற்ற மனையாளே எனப் புகழ்ந்துரைத்தனன்!

இப்போது அம்மன்னன், தன் மனையாள் கிரிசெலாளின் பொறுமையைப்பற்றித் தான் தெரியவேண்டுமௗவெல் லாம் ஆராய்ந்து தெரிந்துகொண்டமையால், நெஞ்சை இரண்டாய்ப் பிளக்கத்தக்க இத்தனை ஆராய்ச்சிகட்கு உள்ளாகியும் முகஞ் சிறிதுஞ் சுளியாத அவள், அறிவில் மிகச் சிறந்தவளாதலால் தன் அறிவில்லா மட்டித்தனத்தால் ங்ஙனமெல்லாம் இத்துன்பங்களைப் பொருள் செயாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/200&oldid=1584975" இலிருந்து மீள்விக்கப்பட்டது