பக்கம்:மறைமலையம் 18.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

175

'இசிக்கிலர்' என்னுங் கிரேக்க நாடகாசிரியர் வழி நடந்து செல்கையில், வானத்தின்கண்ணே பறந்து சென்ற ஒரு கழுகின் நகங்களிலே இடுக்கப்பட்டிருந்த ஓர் ஆமையானது அங்கிருந்து நழுவி அவர் தலையில் விழ, அவர் உடனே கீழ்விழுந்து உயிர்துறந்தார்.

சிசிலிதேயத்திற் கொடுங்கோன் L மன்னனாயிருந்த 'அதோகிலன்'என்பான் தனது 95 ஆம் ஆண்டில் ஒரு பல்லுக்குத்தியினாற் றனது பல்லைக் குத்திக்கொண் டிருக்கையில், அதன் முனையிற் பூசப்பட்டிருந்த நஞ்சினாற் சிறிது நேரத்திற் கொல்லப்பட்டான்.

அனக்கிரீயன்,' என்னுங் கிரேக்க நல்லிசைப் புலவர் ஒருநாட் கொடிமுந்திரிப்பழங்கள் தின்றுகொண்டிருக்கை யில், ஒரு பழத்தின் ஒரு சிறுவிதை நெஞ்சில் அடைக்க உடனே இறந்துபட்டார்.

'பாசர்' என்பார் தமது இடதுகைப் பெருவிரலில் ஒரு கூரிய ஊசியின் முனை தைக்க, அதனால் உடனே மாண்டு போனார்.

'சாலகன்' என்னுங் குறிகாரன், தான் இறந்துபடு நாள் இன்னதென்று முன்னே குறிப்பிக்கப்பட்டபடி அந்நாளிற் சாவாமற் பின்னுந் தான் பிழைத்திருந்ததனை நினைந்து, ஒரு நாள் அளவுக்குமிஞ்சிச் சிரிக்க, அதனால் உடனே உயிர்

நீங்கப்பெற்றான்.

‘எட்டாஞ் சார்லசு' என்னும் அரசன் தன் மனை யாளைப் பந்து விளையாடும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு செல்கையில், தன் அரண்மனைவாயிலின் மேற்படி தலையில் இடிக்க, அதனால் அந்நொடியே இறந்து வீழ்ந்தான்.

‘பேபியர்' என்னும் உரோமநடுவர் ஒருநாள் தாம் பால் கிக்கொண்டிருக்கையில் அதிற்கிடந்த வெள்ளாட்டு மயிர் ஒன்று தமது மிடற்றிற் சிக்கிக்கொள்ள அதனால் மாய்ந்து போனார்.

'பிரடரிக்குலூயிசு' என்னும் உவேல்சு இளவரசர் தாம் பந்தாடிக்கொண்டிருக்கையிற், பந்து மேலேபட்டு இறந்து

போனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/207&oldid=1585034" இலிருந்து மீள்விக்கப்பட்டது