பக்கம்:மறைமலையம் 18.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மறைமலையம் 18

5. பழம்பிறவி நினைவு

ன்

கடார (பர்மா) தேயத்துப் பௌத்தமத மக்களு நெருங்கிப்பழகி, அவர்தங் கோட்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் நன்காராய்ந்து அறிந்து ஒரு சிறந்த நூல் வரைந்த ஓர் ஆங்கில ஆசிரியர், 'ஒரு பெளத்த முனிவர் தமது முற்பிறவியினை நினைவுகூர்ந்து நடந்த உண்மை நிகழ்ச்சி யினையும், அதுபோன்ற வேறு சில உண்மை நிகழ்ச்சி களையுந் தாம் எழுதிய அந்நூலின்கண் எடுத்துக் காட்டி யிருக்கின்றார். அந்நிகழ்ச்சிகளை அவர் கூறுமாறே இங்கு

மொழிபெயர்த்துரைக்கின்றாம்:

“என் நண்பர் ஒருவர், ஒரு சிறிய பட்டிக்காட்டுக்கு நெடுந்தொலைவில் ஒரு கானகத்தின்கண் உளதான ஒரு பௌத்தமடத்தில் ஓர் இராப்பொழுதிற்குத் தங்கவேண்டியவ ரானார். அவர், தமக்குக் காவலாகக் குதிரைமேல் வந்த பாடிகாவலருடன் தங்கவேண்டியிருந்தமையால், அம் மடத்தைத் தவிரத் துயில்கொள்வதற்கு வேறிடங்கிடை க்க வில்லை. அம்மடத்திற் குரியவரான பௌத்த முனிவர், அவர்களை நல்விருந்தாக ஏற்றுத், தம்மிடம் இருந்த உணாப் பாருள்களை அவர்களெதிரே வைத்து, வெறிதாயிருந்த ஓர் அறையினையும் அவர்கட்கென்று ஒழித்துக்கொடுத்தார். அதனால் அவருடன் வந்தவர்களும் அன்றிரவு அங்கே தங்கியிருக்கலாயினர்.

இராச்சாப்பாடு முடிந்ததுங், குளிர்காய்வதற்கு ஒரு கணப்புச்சட்டி கொணர்ந்து நிலத்தே வைத்துத் தீ மூட்டப்பட்டது. உடனே அந்நண்பர் அதனருகே சென்று அமர்ந்து, அவ்வூர்த் தலைமைக்காரனிடத்தும் அம்முனிவ ரிடத்தும் உரையாடத் துவங்கினர். முதலில் அவர்கள், கருத்தைக் கவருஞ்செய்திகளான கொள்ளைக்காரர் செயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/214&oldid=1585092" இலிருந்து மீள்விக்கப்பட்டது