பக்கம்:மறைமலையம் 18.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

187

இனி, யான் கூறப்போகும் நிகழ்ச்சியானது, ஆங்கிலரது படை ‘மாந்தலை’ நகரத்தைக் கைப்பற்றிக்கொண்ட தற்குப்பின் அடுத்த ஆண்டில் நிகழ்ந்ததாகும். அப்போது கடாரதேயமுழுதும் பெருஞ் சீற்றத்துடன் கலகம் விளைத்து நின்றது. அந்நாட்டவர்களெல்லாரும் படைக் கலந்தாங்கி நின்றனர்; பாட்டைகளிற் செல்வது அச்சத்திற் கிடமா யிருந்தது; இராக்காலமோ ஊர்கள் நெருப்புப் பற்றியெரியுந் திகிலான வெளிச்ச முடையதாய்த் தோன்றியது. அமைதி யாய்க் காலங்கழிப்பவர்க்கு அது பொல்லாத காலமாய் மாறியது. அமைதியாய் உயிர்வாழ்ந்த மாந்தர் பலர் பட்டிக்காடுகளில் இருப்பதைவிட்டு, அரசியல் நடைபெறும் நகரங்களையடுத்த பெரிய ஊர்களிற்போய் அடைக்கலம் புகுந்தனர்.

இவ்வாறு துன்புற்ற நாடுகளின் இடையே ‘ஒக்க்ஷித்கான்’ என்னும் ஊரும் இருந்தது. அதனால், அதன்கட் குடியிருந்த மக்கள் பலரும் அவ்விடத்தைவிட்டு ஓடிப்போயினர். அவர்களுள் ஒருவனாகிய 'மாங்கான் என்பவன் தன் மனைவியுடன் ‘கப்யு' என்னும் ஒரு சிற்றூரிற் சென்று அங்கே தங்கினன். அந்த ‘மாங்கா’ ளின் மனைவி அவற்கு இரண்டு ஆண் குழந்தைகளை இரட்டைப்பிள்ளைகளாய்ப் பெற்றனள். அப்பிள்ளைகள் ஒன்றாக வளர்ந்து விரைவில் தமது மொழியிற் பேசக் கற்றுக்கொண்டார்கள். அங்ஙனம் அவர்கள் பேசக் கற்றுக்கொண்டபின் விளையாடும் நேரங் களில், அச்சிறார், தம்முள் ஒருவரையொருவர் அழைக்கும் போதெல்லாந், தம்பெற்றோர் தமக்கிட்ட பெயர்களால் தம்மை அழைத்துக்கொள்ளாமற், "மாங்சன் நயீன் எனவும் மாகைவின்' எனவுந் தம்மை அழைத்துக் கொள்ளுதல் கேட்டு, அவர் தம் பெற்றோர் பெரிதும் இறும்பூதுற்றனர். ஏனென்றால், பெண்மகளின் பெயராகும். மேலும், முதற்பெயரும் ரண்ட ாவது பெயரும் பூண்டிருந்த அவ்வாடவனும் மனைவியும் ‘ஒக்ஷித்கான்' ஊரிற் காதலன்பிற் சிறந்தவராய் வாழ்ந்து இறந்தபின்னர்த்தான், இம் மகார் இருவரும் இவர் தமக்குப் பிள்ளைகளாகப் பிறந்தன.

இரண்டாவது பயர் ஒரு

ஆகவே, இதனை ஆராய்ந்து பார்க்கும்பொருட்டு இப்பெற்றோர் இப்பிள்ளைகளை அழைத்துக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/219&oldid=1585134" இலிருந்து மீள்விக்கப்பட்டது