பக்கம்:மறைமலையம் 18.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

189

அவ்

இருக்கின்றனன். இவன் இருபஃதாண்டுள்ள ஓர் ளைஞன். இரண்டாண்டுகளுக்கு ண்டுகளுக்கு முன் அத் துரைமகனார் வட்டத்திற்கு வந்ததுமுதல் அவன் அவரிடம் வேலை பார்த்துவருகிறான். என் நண்பர் தம் ஏவலன் தனது முற்பிறவி நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்திருத்தலை முன்னொரு நாள் தற்செயலாய்க் கண்டுபிடித்தார். ஆனாலும், அவன் அதைப் பற்றிப் பேசுவதில் மிகவும் வெறுப்புக் கொண்டிருந்தான். இப்போது தானிருக்கும் இடத்திற்கு இருபது கல் தாலைவிலுள்ள ஓர் ஊரில் அவன் முற்பிறவியில் ஒரு பண்மகளாய்ப் பிறந்திருந்தனன். அவன் அப்பிறவியில் நன்னடக்கை யுடையனாயிருந்தமையின், இப்பிறவியில் ஓர் ஆண்மகனாய்ப் பிறந்தனன், ஏனென்றால் ஆண் பிறவி யெடுப்பது கீழ்நிலையிலிருந்த ஓர் உயிர் மேல்நிலைக்கு ஏறுவதாகும்; என்றாலும், அவன் அதைப்பற்றிப் பேச வில்லை. அவன் தான் சிறுபிள்ளையாயிருந்த ஞான்று தனது முற்பிறவியின் நிகழ்ச்சிகளைத் தான் நன்கு நினைவுகூர்ந் திருந்தாலும், இப்போதவைகளைத் தான் பெரும்பாலும் மறந்துவிடுவதாகவே எமக்குக் கூறினன்.'

இவள்

66

கு

இன்னுஞ், சிறிதுகாலத்திற்கு முன், ஏழாண்டு அகவையினளான ஒரு சிறு பெண்ணைப் பார்த்தேன். அவள் தன் முற்பிறவியில் தான் ஓர் ஆண் மகனாய்ப் பிறந்திருந்த வரலாறுகளை யெல்லாம் எடுத்துரைத்தாள். அப்போதிவள் தான் பூண்டிருந்த பெயர் 'மாங்மன்' என்றும், ஊர் ஊராய்ச் செல்லும் பாவைக் கூத்திற் சேர்ந்து தான் பாவைகளை ஆட்டிவருவதுண்டென்றுங் கூறினள். இவன் பெற்றோர்கள், சிறு குழந்தையாயிருக்கையிலேயே இவளுக்குப் பாவைகளிடத்திலும் அவைகளை ஆட்டுவதிலும் மிகுந்த விருப்பம் இருத்தல் கண்டு, இவள் முற்பிறவியிலேயே இத்தகைய தொரு தொழிலை மேற்கொண்டவளாகத்தான் இருக்க வேண்டுமெனத் தாம் எண்ணியதாக எனக்கு எடுத்துரைத்தனர். இவள் பால் பருகும் மகவாயிருக்கும்போதே பாவைகளைக் கயிறு பூட்டி ஆட்டத் தெரிந்தவளாயிருந்தாள். இவள் நான்காண்டு வளர்ந்த பிறகுதான் இவடன் முற்பிறவி நிகழ்ச்சி இவட்குத் திட்டமாய்த் தெரியலாயிற்று. ஒரு பரண்பாவைக் கடையினையும் அதன்கணிருந்த பாவைகளையும் இவள்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/221&oldid=1585151" இலிருந்து மீள்விக்கப்பட்டது