பக்கம்:மறைமலையம் 18.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

211

8. அறஞ் செய்கை

அறம்' என்பது தமிழ்ச்சொல். இதனை வடநூலாற் ‘தர்மம்' என்பர். அறம் என்னுஞ் சொல் அறு என்னும் முதலிலிருந்து உண்டாயது; ஆகவே, ஒருவனுடைய நினைவு சொற் செயல்களின் தீமையை அறுப்பதே அறம் என்னுஞ் சொல்லுக்குப் பொருளாதல் பெறப்படும். ஒருவன் சொல் வனவு ஞ் செய்வனவும் எல்லாம் அவன் எண்ணும் எண்ணத்தின் வழியாகவன்றி வேறுவகையில் நடைபெறுதல் இயலாது. தச்சன் ஒரு மரப்பாவை செய்யும் போதும், ஓவியன் ஓர் ஒரு ஓவியம் வரையும்போதும், ஒரு சிறுவன் ஒரு நூல் ஓதும்போதும், ஒரு பாவலன் ஒரு செய்யுள் இயற்றும் போதும் அவர்கள் ஒவ்வொருவருந் தாந்தாஞ்செய்யுஞ் செயல்களில் தமது நினைவைப் பதியவைத்தாலன்றி, அவர்கள் அவை களைச் செய்து முடிக்கமாட்டாதவர் ஆவர். ஆகவே, நாம் வ்வொருவரும் ஒன்றைச் சொல்லத் துவங்குதற்கு முன்னும், ஒன்றைச் செய்யத் துவங்குவதற்கு முன்னும் அவைகளை முதலில் மனத்தின் கண் எண்ணியே சொல்லவுஞ் செய்யவுந் தொடங்குகின்றோம் என்பதனை நினைவு கூர்தல் வேண்டும். ஒருவன் சொல்லுஞ்சொல் தீயதாகக் காணப்படுமானால் அதனை எண்ணிச் சொன்ன அவனது எண்ணமும் தீயதாகவே யிருத்தல்வேண்டும்; ஒருவன் செய்யுஞ் செயல் தீயதாக இருக்குமாயின் அதனை எண்ணிச் செய்த அவனது எண்ணமும் தீயதாகவே யிருத்தல் வேண்டும்.

அங்ஙனமாயின், தந்தை சொல்லுக்கு அடங்கி நல் வழியில் நடவாத பிள்ளையை அத் தந்தையானவன் திட்டியும் அடித்தும் ஒறுப்பது தீயதாகக் காணப்படுதலால் அவ்வாறு செய்யும் அவனது சய்யும் அவனது எண்ணமும் எண்ணமும் தீயதெனக் கொள்ளல் வேண்டுமன்றோ? மற்று, அவன் அவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/243&oldid=1585336" இலிருந்து மீள்விக்கப்பட்டது