பக்கம்:மறைமலையம் 18.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச

இளைஞர்க்கான இன்றமிழ்

219

கொடுமையினையும், அரசவையிற் பலர் முன்னிலையில் தான் அடிபட்டதனால் தனக்குண்டான மானக்கேட்டின் துன்பத் தினையுங் கற்பித்துவிட்டேன். யான் செய்தது பிழையாயின் அடியேனை மன்னித்தல் வேண்டும்” என நுவன்றனன். அது கேட்ட அரசன் சினந்தணிந்து மகிழ்ச்சி மிக்கவனாய் ஆசிரியனுக்குப் பொற்றூசும், பொற்காசும் வழங்கிச் சிறப்புச் செய்தனனென்பது.

இச்சிறு கதையினாற் றெளியப்படுவது யாது? துன்பம் இன்னதென்றே உணராத ஒருவனுக்கு, அதனை வெறுஞ் சால்லால் எவ்வளவுதான் விரித்து விளக்கினாலும் அவன் அதன் றன்மையினை உணராதொழிய, மற்று அத் துன்பத்தினை அவனே எய்தித் துடிதுடிக்குமாறு செய்த வடனே அதனை அதனை அவன் நன்குணர்ந்து, பிறர்க்கு அத் தகையதொரு நோவினை விளைக்க மனம் இசையான் என்பதேயன்றோ? ஒருபிடி சோறுங் கிடையாமற் சிலநாட் பசித்து வருந்திப், பின்னர் அருளிரக்கம் உடைய ஒருவனால் இன்சுவையடிசில் ஊட்டப்பட்டு, அக்கொடிய இடும்பையி னின்றும், நீங்கிய ஓர் எளியவனே பசித்துன்பம் இனைய தன்றும், அதனை நீக்குவான்றன் ஈரநெஞ்சின் நீர்மை இத்துணையதென்றும், பசித்துப் பெற்ற உணவாற் போதரும் இன்பம் இத்தன்மையதென்றுந் தெற்றென வுணர்ந்து, பிறர் பசித்திருத்தலைக் காணமாட்டாதவனாய் அதனை அவரினின்றும் நீக்குவோன் ஆவன்.

ஆகவே அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்னும் நான்கு தீய நிகழ்ச்சிகளுந் தம்மிடத்தே நிகழாமல் நீக்கவேண்டுவோர், அவற்றைப் பிறர் தம்மி தம்மிடத்துக் காட்டியக்கால் தமக்குண்டாம் மனவுளைவினை நினைந்து பார்த்தும், அவற்றின் கொடுமைக்கு அஞ்சி, அவற்றிற்கு மாறான நல்ல செயல்களைப் பிறர் தமக்குப் புரிந்தக்கால் தமக்குண்டாம் பெருமகிழ்ச்சியினைப் பலகாலும் உணர்ந்து பார்த்தும், அந் நற்குண நற்செயல்களில் தம் மொழிமெய்கள் முனைந்து நிற்குமாறு பழகிவருதல் வேண்டும்.

மன

எனவே, ஒருவர், கல்வி செல்வம் புகழ் புண்ணியங் களிற் சிறந்தவராய் வாழ்தலைக் கண்டால், அவர் மேலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/251&oldid=1585403" இலிருந்து மீள்விக்கப்பட்டது