பக்கம்:மறைமலையம் 18.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

223

தன்னைப் பொதிந்த மாசு நீங்கித் தூய செம்பொன்னென ளி துளும்பி விளங்காநிற்கும். இதனின் மிக்க அறம் வேறொன்று இல்லாமையின், இதனை ஆசிரியர் திருவள்ளுவர் வலியுறுத்தி விளக்கினாற்போலவே, சைவங், கிறித்துவம், பௌத்தம், சமணம், வைணவம் முதலான எல்லாச் சமய ஆசிரியர்களும் இதனையே வலியுறுத்திக் கூறாநிற்பர்; அவர்தம் அருமருந்தன்ன அறவுரைகளைப் பின்னர் ஒரு கட்டுரையினில் எடுத்துக் காட்டுதும்.

L

அற்றேல், மனம் மாசற்றிருத்தல் ஒன்றுமே ஒருவர்க்குப் போதாதோ? அவர் பிறர்க்கு வேறு அறஞ்செய்தலும் வேண்டு மெனப் பகர்வதன் கருத் தென்னை யெனின், அதனையும் ஒரு சிறிது விளக்குதும்: தமது மனம் மாசற்று இன்ப வாழ்க்கையிலிருப்போர், “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனத் தெய்வத்திருமூலர் வேண்டினாற் போலப், பிறருந் தம்மைப்போல் இன்புற்றிருக்க வேண்டு மென்றே எண்ணுவர், அதனையே சொல்லுவர், அதற் காவனவே செய்குவர். பிறர், மேற் சொன்ன அழுக்காறு அவா வகுளி குளி இன்னாச்சொல் என்னும் நான்கு குற்றங்களும் உடையராய், அவற்றாற் பெரிதும் அலைக்கழியும்போது, அதனைக் கண்டு வாளாதிருக்க மாசற்றார் மனம் ஒருசிறிதும் ஒருப்படாது. அந்நான்கு குற்றங்களாலும் மக்களிற் பெரும் பாலார் துன்புறுதற்குக் காரணம், இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள் இல்லாமையும், பொருள் கடைக்கூட்டுதற்கேற்ற அறிவும் முயற்சியும் வாயாமையும், எல்லா உயிர்களின் வாழ்க்கை நிலைகளையும் உணர்ந்து பாராமையுமேயாகும். மாந்தரின் துன்பங்களுக்கு ஏதுவான மூன்றனையும் அவர்பால் நின்றும் அகற்றிவிடவே, அவரெல்லாம் மாசற்ற மனமுடையராய் அறத்தின்கண் நிலைபெறுதல் திண்ணம்.

வளங்

பொருள் இன்றி வறியவராய்க் கிடந்து துன்புறுவோர், பெரும்பாலும் பிறர் சிலரின் செல்வ கண்டு பொறாமைப் படுதல் இயற்கையாய் இருக்கின்றது. தாமே பொருள் வழங்கியாவது, தமக்கு அஃது இசையாவிட்டாற் செல்வர்களை ஊக்கி அவர் அவர்கட்குப் பொருளுதவி புரியும்படி தூண்டியாவது மனமாசற்ற சான்றோர் அறஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/255&oldid=1585436" இலிருந்து மீள்விக்கப்பட்டது