பக்கம்:மறைமலையம் 18.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மறைமலையம் 18

இத்திருமடம் உரோமமுனிவர்க் குரிய தொன்றாகையால், இதில் சேர்ந்தவரில் ஆற்றாமனநோய் கொண்டாரும் மனக் கவலை அடைந்தாரும், இதன் தலைவரான குரு முனிவரிடஞ் சென்று, தம் உள்ளத்தே அடைத்து வைத்த துயரையுங் கவலையையும் வாய்திறந்து வெளியிட்டுச் சொல்லி, அவர் பாலிருந்து மன்னிப்பும் ஆறுதலும் பெறுவது வழக்கம். ஆகவே, அழகியாளான நம் கானத்தோகை க புகழ்பெற்ற இம் முனிவர்பாற் சென்று தன்னுள்ளத் துற்றதை மொழிந்து தானும் அவர்பாலிருந்து மன்னிப்பும் ஆறுதலும் பெறக் கருதினாள். ஈதிங்ஙனம் இருக்க, இப்போது நாம் தேவமணி எவ்வாறா யினான் என்பதனை எடுத்துக் கூறுதற்குத் திரும்புவோம்.

ம்

சில

மேற்சொல்லியவாறு தேவமணி தனது இல்லத்தை வி ட்டுப் புறப்பட்டதும், அன்றை விடியற்காலையிலேயே, இப்போது கானத்தோகை தங்கியிருக்கும் நகருக்குப் போந்து, அதன்கண் உள்ளதொரு துறவோர் திருமடத்தில் தானுஞ் சேர்ந்துவிடலானான். அம்மடத்திற் சேர்வோர், தனிப்பட்ட காலங்களில் தம்மை யின்னாரென்றெவருந் தெரிந்துகொள்ளாத வகையில் மறைமுகமாயிருப்பது வழக்கமாகையால், தானும் அங்ஙனமே அவருள் ஒருவனா யிருந்துவிடத் தேவமணி விழைந்தான். கானத்தோகையைக் குறித்துத் தான் ஏதும் உசாவுதல் ஆகாதென்றுந் தனக்குள் அவன் ஓர் உறுதியுஞ் செய்துகொண்டான். அவள் தன் றந்தையால் ஏற்படுத்தப்பட்ட நாளில், தனக்கு எதிரியான ஒருவனொடு மணம் பொருத்தப்பட்டிருப்பள் எனவே அவன் எண்ணிவிட்டான். தனது இளமைப்பருவத்தில் அவன் கல்வியில் தேர்ச்சியுற்றதெல்லாந், தான் முழுதுஞ் சமயத் தொண்டு ஆற்றுதற் பொருட்டேயாகலான், அவன் இப்போது துறவோர் குழாத்திற் சேர்ந்து தான் கருதிய அத்தொண் டினையே செய்துகொண்டிருக்கலானான். சில்லாண்டுகள் செல்ல அவன் தன் தூய துறவொழுக்கத்திற் பெயர்பெற்ற துடன், தன்பால் உரையாடுவார்க்கெல்லாம் இறைவனிடத்து அன்பு மீதூரச் செய்தும் வந்தனன். இத்தன்மையனான இத் துறவிபாற்போந்தே கானத்தோகை தன்னுள்ளக்கிடக்கையை வாய்விட்டுச் சொல்லி ஆறுதல் பெறுதற்கு முனைந்தாள்; ஆனால், இவளுக்காவது அத்திருமடத்தின் றலவைரை யுள்ளிட்ட ஏனை எவர்க்காவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/262&oldid=1585495" இலிருந்து மீள்விக்கப்பட்டது