பக்கம்:மறைமலையம் 18.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

  • மறைமலையம் -18

அடிகள் பயின்ற சிலம்பு

ஆங்கிலம், தமிழ், சமக்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் கற்றுத் துறைபோய் விளங்கியவர் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புலவர்களில் ஈடிணையற்றவரான மறைத்திரு. மறைமலையடிகளார். தமிழறிஞர்களில் அறிவியல், இலக்கியம், வரலாறு, சமயம், தத்துவம், மறை பொருளியல், சமூக இயல் போன்ற பல்துறை நூல்களைப் படித்ததும்படைத்ததும் அடிகளாரைப் போன்றவர் யாரும் கிடையாது. தமிழாசிரியர் ஒருவர் இத்தனை துறைநூல்களையும் படித்தார் என்பதே வியப்புக்குரியதாம்; அதற்கு மேலாக அவை அனைத்தையும் தமக்கே சொந்தமாகப் பொருள் கொடுத்து வாங்கித் தமக்கெனத் தனி நூலகம் அமைத்துக் கொண்டாரென்றால் அது பெரு வியப்புக்குரியதுதானே. ஏறத்தாழ 4,500 நூல்களை (அக் காலத்திலேயே ஓர் இலட்ச ரூபாய் மதிப்புடையவை) அடிகளார் தொகுத்து வைத்திருந்தார். அவை அனைத்தும் அனைத்தும் இன்று சென்னையில் அவர்கள் பெயரிலேயே இயங்கும் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

அடிகளார் தாம் விலைகொடுத்து வாங்கிய நூல்களைப் பொன்னேபோல் பாதுகாத்தார். நூல்களைப் பேணுவதிலும் படிப்பதிலும் அவர்களுக்கு இணை அவர்களே. தாம் வாங்கிய நூல்கள் அனைத்திற்கும் அவரே தம் கைப்பட மேலுறை யிடுவார். (பகல் உணவு உண்டபின் அடிகள் நாள்தோறும் செய்த வேலை நூல்களுக்கு மேலுறை இடுவது). ஒவ்வொரு நூலிலும் தம்முடைய திருப்பெயரை அடிகளார் தம் திருக்கரத்தால், முத்துப்போன்ற அழகிய எழுத்துக்களால் பொறித்து வைப்பார். (அவற்றில் தாம் எத்தனை வகை Pandit R.S. Vedachalam, Swami Vedachalam, Maraimalai Adigal). ஆங்கில நூல்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/302&oldid=1585566" இலிருந்து மீள்விக்கப்பட்டது