பக்கம்:மறைமலையம் 18.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தேனும் பாலும் போன்ற தூய தீந்தமிழ்ச் சொற்களால் உரைநடையும் செய்யுளுமாகிய இருவடிவிலும் பல்துறை தழுவி ஐம்பதிற்கு மேற்பட்ட அருநூலியற்றி முதலிரு கழக நிலைக்குத் தமிழைப் புதுக்கி அதற்குப் புத்துயிர் அளித்தவர். மாநிலத்தில் மக்கள் உள்ளவரை மறையாப் புகழ் பெற்ற மறைமலையடிகளே.'

'நுண் மாண் நுழை புலம்”, “பனிமலையின் உயரம்; நீல ஆற்றின் நீளம்; அமைதிவாரியின் ஆழம் - ஆகியவை ஒருங்கே அமைந்தவர் மறைமலையடிகள்”.

ஞா. தேவநேயப் பாவாணர்

மறைமலையடிகள் தனித்தமிழியக்கத் தந்தை; புலமைப் பெருங் கடல்; தமிழிலக்கிய வரலாற்றின் ஒளி விளக்கு: தமிழை வடமொழியின் பிடியினின்றும் காப்பாற்றிய தோன்றல் என்றெல்லாம் பன்முறை பாராட்டினாலும் தகும். ஏனெனின், பாலில் தண்ணீர் கலந்து விற்பதுபோல் தமிழர் மணிப்பிரவாள நடையில் பேசிய காலத்தில், தனிப்பால் விற்பவராக - தனித்தமிழ் எழுதுபவராக, பேசுபவராக மிளிர்ந்தவர் மறைமலையடிகள். தமிழ் தமிழாக இருக்க உதவிய ஏந்தல்.

- இரா. மதிவாணன்

உழை

உயர்

உதவு

2, சிங்காரவேலர் தெரு,

தியாகராயர் நகர், சென்னை - 600 017

தமிழ்மண் தொலைபேசி : 044 24339030

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/321&oldid=1585585" இலிருந்து மீள்விக்கப்பட்டது