பக்கம்:மறைமலையம் 19.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

81

ஆனால், அவைக்களங்களிற் கேட்போர் கருத்தை இழுக்கத்தக்க சொற்பொழிவு நிகழ்த்தும் ஆற்றல் அவர்க்கு வாய்த்திலது. மற்றுத் திருநாவுக்கரசுக்கோ, கட்டிளமைக் காலத்தே கட்டுரைகள் கதைநூல்கள் எழுதுவதிற் கருத்துச் சன்றிலதாயினும், அவைகளிற் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் இவர்தம் அறிவும் ஆற்றலும் ஈடுபட்டிருந்தன. அக்காலத்திலேயே சொற்பொழிவுகளைக்

இவருடைய

L

கேட்டவர், இவரை மிகவும் கொண்டாடிப் பேசினர். ஒரு பொருளை எடுத்து விரித்துப் பேசுங்காற், கேட்பவரது கருத்து மகிழ்ந்து அதிற் பதியுமாறு நகைச்சுவை தோன்றப் பேசுந் திறம் இவர்க்கு வாய்ந்தாற்போற் பிறர்க்கு வாய்ப்பது அரிது. நகைச்சுவை மட்டுந் தோன்றப் பேசுவார் பலர் உளர்; ஆனால், அவரது உரையில் அறிந்து நினைவுகூரத் தக்க அரும்பொருள்கள் அமையா. மற்றுத் திருநாவுக்கரசு நிகழ்த்தும் உரையிலோ, நகைச்சுவையோடு பொருட் சுவையும் அமைந்திருந்தது. இன்னும், நகைச்சுவை யில்லாமல், உயர்ந்த துறைகளைப் பற்றிப் பேசுங்காலுங், கேட்பார்க்குச் சலிப்பும் உவர்ப்பும் தோன்றாமல் அவர்களது கருத்தை அவற்றின்பாற் பதியவைக்கும் முறையில் அவைதம்மை அழகு படுத்திப் பேசும் வல்லமையும் இவர்க்கிருந்தது. இங்ஙனம் "எண்பொருள வாகச் செலச் சொல்லுஞ்” சொல்வன்மை வரது இளம் பருவம் முதல் இவர் இறந்துபடுங் காலம் வரையிற் குன்றாதிருந்தது.

இங்ஙனஞ் சொற்பொழிவுகள் நிகழ்த்தும் வகையில் இவர் தமக்கிருந்த அறிவாற்றலைச் சிறுபருவ முதலே நூலெழுதுந் துறையில் செலுத்தியிருந்தனராயிற், சைவத் திற்குந் தமிழுக்கும் நிலையான பயனைத் தரத்தக்க பல அருந்தமிழ் நூல்களை இவர் இயற்றியிருக்கலாம். அதைப் பற்றி இவர்க்கு யாம் பலகால் வற்புறுத்திச் சொல்லியும், அதில் இவர்க்குக் கருத்துச் செல்லவில்லை. சிறு பருவத்தில் இவருக்கிருந்த வறுமையானது புராணப் பிரசங்கஞ் சய்யும்படி இவரைத் தூண்டியது. அதனால் வந்த வருவாய் இவரது இளம்பருவ வாழ்க்கைக்கு உதவி செய்தது.

பின்னர் இவர் கல்விச் சாலைகளில் தமிழாசிரியராய் அமர்ந்து, தமது வாழ்க்கையை இயன்ற

வரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/114&oldid=1585706" இலிருந்து மீள்விக்கப்பட்டது