பக்கம்:மறைமலையம் 19.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

101

மனவருத்தத்தையும் பரவச்செய்து வருகின்றார்கள். இத்தீயபழக்கத்தை ஒழித்தால் அன்றித் தமிழ்மக்கள் முன்னேற்றமடைவது சிறிதும் முடியாது. ஒருவர்பாலுள்ள குற்றங்களை மறைத்து அவர்பாலுள்ள நலங்களை எடுத்துப்பேசுவதற்கே எல்லாரும் விடாப் பிடியாய்ப் பழகுதல் வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் தங்களால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு மனமாரச் செய்து, அவர்களை மேன்மேல் உயர்த்திவிடுதல் வேண்டும். தாம்செய்யும் உதவிக்குக் கைம்மாறானதொன்றை எதிர்பார்த்திருத்தல் ஆகாது. அப்போதுதான் நம்முடைய மக்கள் உண்மையான முன்னேற்றத்தை அடைவார்கள்.

அறிவுரைக்கோவை

- முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/134&oldid=1585726" இலிருந்து மீள்விக்கப்பட்டது