பக்கம்:மறைமலையம் 19.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ

  • உரைமணிக்கோவை

.

171

கோயில்களும், சிவனடியாரியற்றிய நூல்களுமே சான்றாகும். திருவள்ளுவரியற்றிய திருக்குறளின் கொள்கைகளை நடு நின்று ஆராய்ந்து பார்க்கும் மெய்யறிவாளர்கள், அது சைவக் கோட்பாடுகளைத் தவிர வேறு மதக் கோட்பாடுகளை உள்ளடக்கியது அற்றென்பதை அறிவார்கள். அவர் கடவுள் வழிபாட்டையும், அக்கடவுள்வழிபாடு செய்யும் உயிர்கள் உண்டென்பதையும் வற்புறுத்திச் சொல்லியிருத்தலாற், கடவுளும் உயிரும் இல்லை யென்னும் பௌத்த சமயத்தை அவர் தழுவியவர் ஆகார். மேலும், தாமே கொல்லாமற் பிறர் கொன்ற உயிரைத் தின்னலாமென்னும் பௌத்த சமயக் கொள்கையை மறுத்து,

“தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்”

256

என்று அவர் அருளிச் செய்திருப்பதும் அதற்கொரு சான்று. இனி, உயிர்களுண்டென்று சொன்னாலுங் கடவுளில்லை யென்று மறுக்கும் சமணமதத்தவரும் அவர் ஆகார். மேலும், தலையை மழுங்கச் சிரைக்கும் பௌத்தத் துறவிகளின் வழக்கத்தையும் தலை மயிரை நீட்டி வளர்க்குஞ் சமணத் துறவிகளின் வழக்கத்தையும் மறுத்து,

“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்

(குறள் 280)

என்று அருளிச் செய்திருத்தலால், அவருக்குப் பெளத்த சமணக் கொள்கைகள் உடன்பாடல்ல வென்பது திண்ணம்.

இனி, உலகம் பொய் யென்றும், நானே கடவுளென்றும் கூறும் மாயாவாதக் கொள்கையும் அவர்க்கு உடன்பாடன்று. ஏனென்றால்,

“நில்லா தவற்றை நிலையின வென்றுணரும் புல்லறி வாண்மை கடை

என்றும்,

“வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி”

(குறள் 331)

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/204&oldid=1585804" இலிருந்து மீள்விக்கப்பட்டது