பக்கம்:மறைமலையம் 19.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

183

இனி, இராமானந்தர்க்குப் பின்அவர் தம் மாணாக்கருள் ஒருவரான கபீர்தாசர் என்பவர் கடவுள் பல பிறவிகள் எடுத்தார் எனக் கூறுவது அடாதென்றும், இறைவனைக் கல் செம்பு கட்டை வடிவில் வைத்து வணங்குதல் பெருங் குற்றமாமென்றும் இந்து சமயக் கிரியைகளுஞ் சடங்குகளும் பொருளற்ற புன்செயல் களென்றும் இந்தி மொழியின் ஒரு பிரிவான ‘அவதி' மொழியிற் பாடல்களைப் பாடியிருக் கின்றார்.

இனிக் கபீர்தாசருக்குப் பின் அவர் தம் மாணாக்கரான நானாக் என்பவர் தம் பாடல்களைப் பஞ்சாபியும் இந்தியுங் கலந்த கலப்பு மொழியில் அமைத்துச் ‘சீக்கிய’ மதத்தைப் பரப்பினார்.

னி, இற்றைக்கு 510 ஆண்டுகளுக்கு முன் தர்பங்கா மாகாணத்தின் கண்ணதான ‘பிசபி' என்னும் ஊரில் ‘வித்யாபதி தாகூர்' என்ற வைணவர் ஒருவர் இந்தி மொழி யின் மற்றொரு பிரிவான ‘மைதிலி’ மொழியில் கண்ணனுக்கும் அவன் காதலி இராதைக்கும் இடையே நிகழ்ந்த காதல் நிகழ்ச்சிகளை விரித்துப் பல பாடல்களைப் பாடியிருக்கின்றார். இப் பாடல்களையே பின்னர்ப் ‘பங்காளி' மொழியில் சைதன்யர்' என்பார் மொழி பெயர்த்து, அவற்றை வங்காள தேயமெங்கு பரவ வைத்தனர். இதுகொண்டு. இந்தி மொழி ழி வங்காளதேயத்தி லுள்ளார்க்குள் வழங்காமை அறியப்படுகின்ற தன்றோ? வடநாட்டிற் பெரும் பரப்பினதான வங்காள தேயத்தார்க்கே தெரியாததான இந்தி மொழியைத் தென்னாட்டிலுள்ளவர்கள் தென்னாட்டி லுள்ளவர்கள் பயின்றாலும், இவர்கள் வங்காள மக்களுடன் அதிற் பேசி உறவாட முடியாதன்றோ?

ஆதலால், துவரையிற் கூறியதுகொண்டு, இந்தி மொழியானது 500 ஆண்டுகளுக்குமுன் நூல்வழக்கில்லாமற் கல்வி யறிவில்லா வடநாட்டு மக்களால் அந்நாட்டின் பல பகுதிகளிலும் பலவாறு திரித்துப் பேசப்பட்டு, ஒருபாலார் பேசும் மொழி மற்றொரு பாலார்க்குத் தெரியாதவண்ணம் வழங்கினமையால், அஃது இஞ்ஞான்றுங் கூடப் பற்பல மொழிகளாகவே பிரிந்து வழங்குகின்றதென்பதும். அதனால் இந்தியை வடநாட்டவர் எல்லார்க்கும்பொதுமொழியெனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/216&oldid=1585821" இலிருந்து மீள்விக்கப்பட்டது