பக்கம்:மறைமலையம் 19.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மறைமலையம் 19

நாற்பத்தொன்பது நாடுகள் கடல் கொள்ளப்பட்டன வென்பது புலனாம். இந்நாள் அளவைப்படி ஒரு காவத மென்பது பத்து மைலாக எழுநூறு காவதமும் ஏழாயிர மைலெல்லையளவாம். 'இந்து மகாசமுத்திரம்' இப்போது இ ரு

ஆங்கில நூல்வல்லார் அளந்தறிந்த வாற்றான்

நூற்றைம்பது இலட்சஞ் சதுர மைலுடைய தென்பதியாரு மறிவர். இதனாலது சிறிதெறக்குறைய ஐம்பது இலட்சம் மைல் நீளமும் ஐம்பது இலட்சம் மைல் அகலமுடைய ய தென்பது. ஏழாயிர மைல் நிலனாயிருந்து கடல் கொள்ளப் பட்டதென்பது இப்போதுள்ள மோரீசு தீவுக்குத் தற்கேயுள்ள கெர்கியூலன் என்னுந் தீவுக்கு மிடையிலுள்ள நீளமும் அவ்வளவினதேயாம். ஆகவே நீளத்தில் இப்போ துள்ள குமரிமுனையிலிருந்து கெர்கியூலன் என்னுந் தீவுக்குத் தற்கிலுள்ளவரையிலும் அகலத்தில் அடகாசிகர் தீவுமுதற் சுமத்திரா, சாவா முதலிய தீவுகளை யுள்ளடக்கிய சந்தாதி தீவகளளவும் நீண்டு விரிந்து கிடந்த குமரிநாடு (இலெமுரியா) கடல்கொண்டொழிந்ததென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/245&oldid=1585857" இலிருந்து மீள்விக்கப்பட்டது