பக்கம்:மறைமலையம் 19.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

  • உரைமணிக்கோவை :

229

நூறுகோடி பிரமர்கள் நொந்தினார், ஆறுகோடி நாராயணர் அங்ஙனே, ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர், ஈறிலாதவன் ஈசன் ஒருவனே” எனவும் சைவாசிரியர் தந் திருவாசக தேவாரச் செந்தமிழ்மறையிற் கூறப்பட்டதும் என்னை யென்று யாம் கடாவினால், அதற்கு விடை சொல்ல மாட்டாமல் விழிக்குஞ் சைவப்போலிகள், கற்றறிவில்லாச் சைவர் குழுவிற் சென்று 'சிவபிரான் அருளிச் செய்த ஆரிய வேதங்களை மறைமலை யடிகள் இகழ்கின்றார்' எனக் கரைந்து அவரைத் தம் பொய்யுரையால் மயக்குகின்றனர். இருக்கு முதலான ஆரியச் சிறு தெய்வ நூல்கள் சைவ சமய நூல்களேயாதல் உண்மை யாயின், சைவ சமயத்திற்குச் சிறந்த கொல்லா அறமும், திருநீறு உருத்திராக்கம் முதலான சிவ அடையாளமும், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரமும், உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் என்னுஞ் சிவமூர்த்தங்களும், சிற்றம்பலம் கூடலால வாய் முதலான சிவபிரான் திருக் கோயில்களும், சுத்தமாயை அசுத்தமாயை, வினை, ஆணவம் என்னும் மும்மல இலக்கணங்களும், சுத்த வித்தை ஈசுரம் சாதாக்கியம் சத்தி சிவம் என்னும் ஐந்து சுத்தமாயா தத்துவங்களும், விஞ்ஞானகலர் பிரளயாகலர் சகலர் என்னும் மூவகை ஆருயிர்ப் பாகு பாடுகளும், வைரவன் வீரபத்திரன் விநாயகன் சுப்பிரமணியன் முதலான சிவபிரான் திருப்புதல்வர் பெயர்களும், நீர் வேதம் வேதம் எனக் கூவும் இருக்கு நூலின்கண் ஓர் எட்டுணையுங் காணப்படாமை யென்னை? என்று யாம் கடாவினால், அதற்கு விடைசொல்ல அறியாமற் கலங்குஞ் சைவப் போலிகள் வெறுங் குருட்டுத்தனமாய் அலறிக் கூவும் பொருளில் மொழிகளையே

சவ

சமய நூலுணர்ச்சி சிறிதும் இல்லாப் போலிச் சீர்திருத்தக்காரர்களும் சைவ சமயத்தைத் தமக்குத் தோன்றிய வாறெல்லாம் புறம் பழித்துப் பேசியும் எழுதியும் வருகின்றார்.

இனிப் 'புராணங்கள்' என்பன இறைவன்றன் வரம்பி லாற்றலையுந், தன்னை நினைந்துருகும் அடியாரைக்காத்தற்கு அவன் செய்த அருட்டிறங்களையும் உயர்ந்த அறிவு இல்லாப் பொது மக்கட்கு உணர்த்தல் வேண்டி இரக்கமுள்ள சான்றோராற் கட்டிவைக்கப்பட்ட பழைய கதைகளை யுடையனவாகும்.

வ்வாறு ஆக்கப்பட்ட கதைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/262&oldid=1585874" இலிருந்து மீள்விக்கப்பட்டது