பக்கம்:மறைமலையம் 19.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

  • மறைமலையம் 19

மேலாகக் கருதாது, தன்னை வணங்கு வாரெல்லாரிடத்தும் அன்பும் இரக்கமும் உடையனாய் ஒழுகுவனாயின், அவனை வணங்குவார் தமக்குள்ள அச்சந்தீர்ந்து அவன்பாற் பேரன்புடையராய் உளங்குழைந்து உருகி யொழுகுதலையுங் காண்கின்றோம்.

கடவுளை

இவ் வியல்பை உற்று நோக்குங்காற், அச்சத்தால் வணங்குவோர் நிலைக்கும், நிலைக்கும், அன்பினால் வணங்குவோர் நிலைக்கும் உள்ள வேறுபாடு நன்கு விளங்கா நிற்கும். “கடவுள் ஒப்புயர்வு அற்ற செல்வமும் அறிவுந் தலைமையும் வலிமையும் உடையர். அவரை வணங்காது ஒழியின் நமக்குத் தீங்குண்டாம்” என்னும் அளவே கருதி, அவரை அச்சத்தால் வணங்குவோர் தாழ்ந்த நிலையின ராவர். "மேற்குறித்த வளங்களையுடைய ய னாதலுடன், எம்பெருமான் ஒன்றுக்கும் பற்றாத எளியேங்களிடத்து அளவிறந்த அன்பும் இரக்கமும் உடையன்” என்று கருதி அவனை அன்பினால் வணங்குவோர் உயர்ந்த உயர்ந்த நிலை யினராவர். அன்பினால் வணங்கும் உயர்ந்த நிலையினரே கடவுளின் உண்மையை உணர்ந்தாராவர். ஏனென்றாற், கடவுள் எல்லையற்ற செல்வமும் அறிவுந் தலைமையும் வலிமையும் மட்டுமே யுடையரல்லர்; யரல்லர்; அறியாமையுந் துன்பமும் உடைய எல்லா உயிர்களுக்கும் அவ்விரண்டை யும் நீக்கி, அறிவும் இன்பமும் தருதற்கு அவர் செய்திருக்கும் ஏற்பாடுகளின் அருமையை எண்ணிப் பார்க்கப் பார்க்க அவர் எல்லா உயிர்களிடத்தும் எல்லையற்ற அன்பும் இரக்கமும் உடை டையரென்பது தெளிவாக விளங்குகின்றது. உடம்பிலுள்ள உறுப்புகளிற் கண்ணினுஞ் சிறந்தது பிறி தில்லை; கண் இல்லையானால் நமது அறிவு முக்காற் பங்குக்குமேல் விளங்காது ஒழியும். இத்துணைச் சிறந்த கண்ணையும், இதற்கு அடுத்த சிறப்பிலுள்ள ஏனை உறுப்புக் களையுந் தாமாகவே படைத்துக்கொள்ள வல்லவர்கள் எங்கேனும் உளரோ? இல்லையன்றே! எவரானும் படைக்க முடியாத இவ்வரும் பெறல் உறுப்புக்களை, நாம் கேளா திருக்கையிலும் நமக்குப் படைத்துக் கொடுத்தவன் நம்பால் எவ்வளவு அன்பும் எவ்வளவு இரக்கமும் உடையனாயிருக்க வேண்டும்! இது து பற்றியன்றோ மேனாட்டிற் மேனாட்டிற் சிறந்த

நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/285&oldid=1585897" இலிருந்து மீள்விக்கப்பட்டது