பக்கம்:மறைமலையம் 19.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மறைமலையம் 19

ணர்வர். அச்சிறந்த நோக்கம் யாதோவென்றால், நாம் அறிவும் இன்பமும் இவையென உணர்ந்து, நமக்கு இயற்கையாய் உள்ள அறியாமையுந் துன்பமுங் களைந்து, என்றும் அழியாப் பேரின்பத்தில் நாம் நிலைபேறாயிருக்க வேண்டுமென்பதே அதுவாம். உலகத்தின்கண் உள்ள அரிய காட்சிகளையும், இனிய ஒலிகளையும், தீஞ்சுவைகளையும், நறுமணங்களையும், மென்பொருள்களையுங் கண்டு கேட்டுச் சுவைத்து உயிர்த்துத் தொட்டு உணர்தலாலும், அறிவால் மிக்க சான்றாரோடு பழகி அவர் ஆக்கிய நூல்களை ஆராய்ந்து அறிதலாலும் யாம் நாளுக்கு நாள் அறிவும் இன்பமும் இவையென உணர்ந்து அவற்றால் மேன்மேல் உயர்ந்து வருகின்றனம் அல்லமோ? ஆகவே இறைவன் இவ்வுலக வாழ்க்கையினை வகுத்தது, நாம் அறிவில் வளர்ந்து பேரின்பத்திற் சன்று நிலைபெறுதற்

அவனது

பொருட்டேயாமென்பது நன்கு துணியப்படும்.

நாம் கடவுளின் பேரறிவினையும் பேரின்பத்தினையும் அறிதற்குக் கருவிகளாகவே அறிவையும் இன்பத்தையும் சிறிது சிறிதே காட்டும் இவ்வுலகத்துப் பொருள்களையும் இவ்வுடம்புகளையும் இறைவன் அமைத்தனனேயல்லாமல் இப்பொருள்களும் உடம்புகளுமே பேரறிவையும் பேரின் பத்தையும் அளிக்குமென அமைத்தானல்லன். ஆதலாற், சிற்றறிவு சிற்றின்பங்களைத் தரும் இவற்றிற் பற்றுவையாமற், பேரறிவு பேரின்பங்களைத் தருங் கடவுளிடத்தில் நாம் பற்றுவைத்தல் வேண்டுமென்பதே அவனது அரும்பெரு நோக்கமாதலால், அந்நோக்கத்தை யுணர்ந்தவர்களல்லாமல் மற்றையோர் இவ்வுலகப்பற்றைவிடார். ஆகவே, இறைவனைச் சார்ந்து வணங்கி அவன்றன் பேரின்பத்தை நாம் பெறுவது அவனது நோக்கத்தோடு ஒத்திருத்தலால், அதுகண்டு இறைவன் திருவுளம் மகிழ்வன். மகன் உயர்ந்தநிலை யடைதல் கண்டு மகிழாத தந்தைதாயரும் உளரோ? எனவே, நாம் இறைவனை வணங்குவது நமக்குப் பெரும்பயன் தருதலோடு, இறைவற்கும் மகிழ்ச்சி தருவதாகலின், அவற்குத் திருக் கோயில்களும் திருவிழாக்களும் அமைத்து வணங்குதலே சிறந்த முறையாமென்க. இஃது உணர்த்துதற்கே அப்பரும்,

க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/287&oldid=1585899" இலிருந்து மீள்விக்கப்பட்டது