258
மறைமலையம் 19
வாராது' என்றல் பொருந்தாதாம் பிறவெனின்;- நன்று சான்னாய், என்றுமில்லாத பாழிலிருந்து உள்பொருளான வ்வுலகங்களைப் படைத்திட்டானென்றல் முன்னே யுரைத்த நியாயவுரைக்கு ஒரு சிறிதும் பொருந்தாமையின் அவர் கூறும் உலகப்படைப்பு கொள்ளற்பாலதன்று. அற்றன்று, இறைவன் அளவிறந்த ஆற்றலுடையான் என்பது நுமக்கும் ஒப்ப முடிந்தமையின், அப்பெற்றியனான அவன் இவ்வுலகங்களையும் இன்னும் இவைபோல்வன பிறவற்றை யும் வெறும் பாழினின்று படைத்திட்டானென்றல் மாறு கொள்ளாதெனின்;- ‘ஆற்றல்' என்பதன் இலக்கணமறியாது கூறினாய். ஆற்றலென்பது அசையாது கிடக்கின்ற ஒரு பொருளை அசைவிப்பதும் அசைகின்ற ஒரு பொருளை அங்ஙனம் அசையாது நிறுத்துதலுமாம். கூட்டல், பிரித்தல், குறைத்தல், மிகுத்தல், திரித்தல், அறுத்தல் முதலிய கருமத் தாகுதிகளும் ஈண்டுக் கூறிய இலக்கணத்தில் அடங்கும்.
ள
வழுவ வழுப்பான சமநிலத்திற் கிடக்கும் பருக்கைக்கல் லொன்று தானே இயங்காது. அதனை யாம் எமது சிறு விரலால் அசைவிக்க அஃது இயங்கும். இயக்கல் கூடாது. அதனை எளிதில் இயக்கும் பொருட்டு ஏதாயினும் பிறி தொரு கருவிகொண்டு தான் அவ்வாறு செய்தல் வேண்டும். அன்றி அக்கருவியும் வேண்டாமல் யாமே எங் கைகளால் முயன்று எடுத்து அதனை இயக்குவோமாயின், எம்மைக் கண்டார் ‘இவர் மிக்க உடற் பலமுடையார்' என்று வியந்து பேசுவார். இவ்வாறே யாம் ஒன்றாய்க் கூட்டுதற்கு அருமை யான இருப்புச் சலாகைகளை ஒன்று கூட்டியும், இரு கூறாக்குதற்கு அரிய பெருத்த மரங்களை இரு கூறுபடுத்தியும், அறுத்துக் குறுக்குதற்கு அரியவற்றை அறுத்துக் குறைத்தும், திரிப்பதற்கு அரிய இருப்புக்கோல்களை
ரு
ய
நூல்போல் திரித்தும், பரிய இருப்புத்தூண்களைத் துகளாக்கியும் வன்மை செய்தவழி எம்மைக் கண்டாரெல்லாரும் எம்மாற்றலை மிக வியந்தெடுத்துப் பேசுவர். ஆகவே, எம்முடைய ஆற்றலளவு அவ்வாற்றலால் உய்க்கப்படும் கல் முதலிய பொருளளவுபற்றியே அறியப்படுவதாம். அப்பொருள் சிறிதாயவழி அதனைச் செலுத்துவானாற்றல் சிறிதென்றும், அது பெரிதாயவழி அதனைச் செலுத்துவானாற்றல்