பக்கம்:மறைமலையம் 20.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

103

மலையை ஒக்கும் சிவந்தமார்பிற் புரண்டசைய, மலைதரு மடந்தை குறங்கின் மிசை இருந்து - மலையரசன் ஈன்றெடுத்த உமைப்பிராட்டியார் தமது தொடையின்மேல் அமர்ந்து, வலம்படுகையால் பெரும்புறம் கவைஇ வலிமை பொருந்திய வலக்கையால் அகன்ற முதுகைத்தழுவி, உலம்படு திரள்தோள் ஒருமுலை ஒற்ற - உருண்ட கல்லுக்கு நிகரான திரண்டதோளை ஒருபக்கத்துக் கொங்கையால் ஞெமுங்க, நரை ஏறு ஊர்ந்த புரைசால்தோற்றம் நினைதொறும் வெண்ணிறமான விடையின் மேல் ஏறிய உயர்வுமிக்க சிவபிரானது தோற்றத்தை எண்ணு தொறும், குழையும் உரவோர்க்கு நெஞ்சுருகும் அறிஞரான சைவர்க்கு, வைகலும் கேடுபுரி நெஞ்சின் பீடுஇலா அமணர் நாளுந் தீமைசெய்யும் நெஞ்சையுடைய

பெருமையில்லாத சமணர்கள்;

அதள், தோல்; உடுக்கை தொழிலாகுபெயர்.

இதை, அளபெடை இசைநிறைத்தற்பொருட்டாய் வந்தது; “ஈகைக்கண்ணியிலங்கத் தைஇ" என்புழிப் (புறநானூறு, 353)

போல.

'வலம்படுகையாற் பெரும்புறங் கவைஇ' யென்னுங் குறிப்பால் உமையம்மையார் சிவபிரானது இடப்பக்கத்துத் தொடைமிசை அமர்ந்திருத்தல் உணரப்படும்.

'உலம்படுதிரடோள்’

என்னும்

வழக்கு 'உலந்தருதோளினாய்" எனச் சீவகசிந்தாமணியிலும் (நாமக,175) வருதல் காண்க.

66

'புரை' ஈண்டு உயர்வின்மேலது; அரசுவீற்றிருந்து புரையோர்ப் பேணி” (25:81) என்பது மணிமேகலை.

'நெஞ்சினர், மயக்குநர், கரவினர், சமணர்' தொடர்ந்து கொள்க.

எனத்

‘பரல்கெழு முரம்பின் (13) கேடுபுரிநெஞ்சிற் பீடிலாவமணர்' என ஈண்டுக் கூட்டியுரைத்துக்கொள்க.

(24-29) பீடு உயர் செந்தமிழ்க் கூடலில் தோன்றி பெருமைமிக்க செந்தமிழ்மொழிப்பயிற்சி விளங்கிய மதுரைமாநகரிற் புதிது வந்து, பொய்படு புன்பொருள் கான்று இருள்பரப்பி பொய்மை நிரம்பிய தம் புல்லிய சமண்

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/128&oldid=1586872" இலிருந்து மீள்விக்கப்பட்டது