பக்கம்:மறைமலையம் 20.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

109

தமிழ்வேதங்கள் தன்மாட்டே அருநிகழ்ச்சிகள் வாயிலாய் மெய்ப்பிக்கப்பட்டமையானும் 'பெருந்தமிழ்க்கூடல்' எனச்

சிறப்பிக்கப்பட்டது.

குலச்சிறை முனிவன், பாண்டிமன்னற்கு அமைச்சர்.

ரு

(54-62) பால்கடல்பிறந்த சீர்த்திரு ஆகலின் - திருப்பாற் கடலில்தோன்றிய புகழ்பொருந்திய திருமகளாதலின், இருமுலைக்குடத்தின் ஒருவழி அடக்கி - அப்பாற்கடலிருந்த பால் முழுமையும் தன் இரண்டு கொங்கைகளென்னுங் குடங்களில் ஒருமிக்க அடக்கிவைத்து, மலைமகள் ஆதலின் முலைதரல் சுருங்க வள்ளத்து ஏந்திய சில்அமுது அருந்தி ஆனாவேட்கையின் வருவோன் இவன்என முலைமுகம்திறந்தவழி - சீகாழியின்கண் திருமுலைப்பாலூட்டிய உமையம்மையார் மலையரசன் புதல்வியாகலின் அவர்தம் திருமுலைகளிற்பாற் சுரப்புக்குறைய அவ்வாற்றால் அவற்றின்கண் இருந்தவரையில் ஒரு பொற் கிண்ணத்திற் கறந்தெடுத்த சிறிதானபாலைப் பருகி அதனால் அடங்காத பெருவேட்கையுடன் வருகின்றவன் இவனென்று தன்முலைகளின் காம்புநுனிகள் வாய்திறந்த விடத்து, வழிப்போக்கிய பால்கடல் ஊட்டிய பவளச் செவ்வாய்த் தென்னவன் தேவிக்கும் - அத்திறந்தவழியே யொழுகச் செய்து தான் அடக்கிவைத்திருந்த பாற்கடல்முழுமையும் ஊட்டிய பவளத்தை யொத்த சிவந்த வாயிதழ்களையுடைய பாண்டியன் மனைக்கிழத்தியாரான மங்கையர்க்கரசியாருக்கும், பொன்போல் புதல்வன் ஆயினை என்பது அறியத்தெருட்டி - பொன்னைப் போன்ற அரிய புதல்வனாயினை யென்பதை எல்லாரும் அறியும்படி தெளிவித்தருளி.

திருமாலின் கூறான அரசன் றேவியாகலின், மங்கையர்க் கரசியார் 'திரு' வென உருவகப்படுத்தப்பட்டார்.

பால்

பாற்கடலிற் பிறந்தமையின் அரசியார்க்குப் மிகுந்திருந்ததெனவும், மலையகத்துப் பிறந்தமையான் உமைஅம்மையார்க்கு அது குறைந்திருந்த தெனவும், அங்ஙனங் குறைந்திருந்தமையால் அம்மையார் தம்மகத்திருந்த அச்சிறிதளவு பாலினையே வள்ளத்தேந்தி யூட்டினாரெனவும், அவ்வாற்றால் திருஞானசம்பந்தப் பிள்ளையார் பாலுண்ணும் வேட்கை தணியாராய் அவாமிக்குப் போந்தாரெனவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/134&oldid=1586878" இலிருந்து மீள்விக்கப்பட்டது