பக்கம்:மறைமலையம் 20.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

  • மறைமலையம் - 20

பின்னுஞ் சிலரை அதன் பிற் கூறினார். என இங்ஙனங் கூறுவார்; பாஞ்சராத்திரரும், ஏகான்மவாதம் பரிணாமவாதம் மித்தியா வாதம் புகலும் மாயாவாதக்குழுவினரும் ஆவர். பாஞ்சராத்திரர் நம்போல் மங்களாய்ப் பிறந்திறந்தாரைக் கடவுளாய்க் கொள்வர். இவற்றின் விரிவெல்லாஞ் சிவஞானசித்தியார் பரபக்கத்தும், மாதவச் சிவஞானமுனிவர் இயற்றிய சிவஞானபோத மாபாடியத்துங் காண்க.

‘என்னே' என்பதன் என்பதன் ஏகாரம் இரண்டிடங்களிலும் இகழ்ச்சிக் குறிப்பின்மேல் வந்தன; தூயவென்றது, மலமாசற்ற வென்னும் பொருட்டு; சைவத்திருக்கோயில் களிலெல்லாங் கருவறையுள் நிறுத்தப்பட் டிருக்குஞ் சிவலிங்கக்குறி தழற்பிழம்பின் அடையாளமே யாகும்; தழற் பிழம்பு நீண்டுகுவிந்திருத்தல்போற் சிவலிங்கத் திருவுருவமும் நீளமாய் நுனிகுவிய அமைக்கப் பட்டிருத்தல் காண்க.

‘ஆகுவ' என்பதில் 'கு' விரித்தல் விகாரம்;

‘நெஞ்சம் பிணிக்க’, தம்வயப்படுத்த; என்றது வஞ்சமுள்ள மாந்தர் சிலர் தமது வயிற்றை நிரப்பிக்கொள்ளும்பொருட்டுப் பொருள் வருவாய் ஒன்றே கருதிப் பிறரைத் தம்வயப் படுத்துவர் என்றற்கு.

‘சூழ்ச்சி' யென்பது ஈண்டுச் சூது; கீழ்த்திறம், கீழறுக்குந் திறம்; புறத்தே நன்மைதோன்ற ஒழுகி அகத்தே தீமைசெய்யுங் கரவொழுக்கம்;

அளவில் எண்ணிக்கைக்கு மணலினை உவமித்தல் பழைய நூல் வழக்கு; இவ்வழக்குண்மையை "நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” யென்னும் புறநானூற்றடியிலுங் காண்க

(9).

'அளவிலரன்றே (15), வாழ்வோரும் பலரே (53), பிறங்குவோர் பலரே (65), சிறந்தோரும் பலரே (75, மக்களும் பலரே (83), விழலரும் பலரே (87), கையரும் பலரே (93), மணலினும் பலரே (111) என்று தொடர்பு படுத்துக்கொள்க.

(112-118) ஆங்ஙனம் ஒழிந்த அளவில் மாந்தருள் யானும் ஒருவனாக நோனாது - என அவ்வாறெல்லாஞ் சிற்றின்ப நுகர்ந்தும் பொய்ப்பொருளுணர்ந்தும் மாய்ந்தொழிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/203&oldid=1586947" இலிருந்து மீள்விக்கப்பட்டது