பக்கம்:மறைமலையம் 20.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

  • மறைமலையம் - 20

பனிநீர் ஆட்டி ஈரம் புலர இன்புகை ஊட்டித் தாம் எனை விடுத்துப்போக - புழுகுநெய் தேய்த்துப் பனிநீரால் நீராட்டிப் பின் அதன் ஈரம் உலரும்படி மணமினிய அகிற்புகையைப் புகட்டி அவர்கள் என்னை விட்டுச் செல்ல, ஏனோன் பிறிதோர் நல்லிடம் புகுத்த - மற்றோர் ஏவலாளன் மற்றொரு சிறந்த இடத்தில் என்னை உட்செலுத்த;

கார்காலத்தே மின்னல்கள் அடுத்தடுத்துத் தோன்றிப் பளீர் பளீர் என வீசி அழகிய கொடிக்கொடியாய்க் காணப்படுதலின், “கார்மின் அனைய" எனப்பட்டது. முன்னும் “மின்புனை மகளிர்” என வந்தமை காண்க. இம் மகளிர் ஏவன் மகளிராவர்; ‘குறுநகை’ யெனப்பட்டது, மகிழ்ச்சியை விளக்க.

பாசியாய் சடையாகி; (சூடாமணி,4,63). புணர்ப்பு - சிக்கு; உளர்தல் - மயிர்கோதல்; “தம்மேனிநோக்கார் தலையுளரார்" என்பது ஆசாரக்கோவை (77). எள்நெய் இட்டு நீவாமையிற் சிவந்த மயிர் த உடைமையிற் புன்றலையென்றார்; பட்டினப்பாலை (90) உரையுங் காண்க. புழுகு, 'புனுகு' எனவும் வழங்கும். உரைத்தல் - தேய்த்தல்; பனிநீர் இது குளிர்ச்சியும் மணமும் உள்ளமையின், இப்பெயர் பெற்றது.

(154-163) ஆண்டை-அங்கு, கவின்கெழு சிலதர் விரையினர் புகுந்து - அழகுமிக்க ஏவலாளர் விரைவுடையராய் நுழைந்து, விண்ணோர் வேந்தன் கண் எனப் பொலிந்த என் துன்னல் சிதாஅர் நீக்கி - விண்ணவர் கோனுக்கு உடம்பெங்கும் உள்ள கண்கள்போல் விளக்கமாய்த் தெரிந்த எனது தைக்கப்பட்ட கிழிந்த கந்தையை அகற்றி, முன்னிய அரவு உரிஅன்ன ஆடை உடீஇ - மதிக்கத் தகுந்த பாம்பின் தோல்போன்ற மெல்லிய ஆடையை உடுத்து, கலவைச் சாந்தம் புலர அட்டி-நறுமணப் பண்டங்கள் கலந்த சந்தனக் குழம்பை மார்பில் உலரும்படி அப்பி, முகைநெகிழ்ந்து விரிந்த தகைசால் நல்மலர் பிணையலாக்கி மணம்உற மிலைச்சி மொக்கு முறுக்கவிழ்ந்து மலர்ந்த அழகு நிரம்பிய சிறந்த மலர்களை மாலையாகத் தொடுத்து மணங் கமழும்படி சூட்டி, துளங்கு ஒளிக் கலன்கள் விளங்க அணிந்து நிழலாடுகின்ற ஒளியையுடைய அணிகலன்களை அழகு விளங்கும்படி பூட்டி, மணித்தவிசு இட்டு அதன்மிசை என எனை ன இரீ இரீஇ அழகிய இருக்கையை அதன்மேல் என்னை இருத்தி;

-

டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/301&oldid=1587045" இலிருந்து மீள்விக்கப்பட்டது