பக்கம்:மறைமலையம் 21.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறைமலையம் – 21

பெற்றுக் கல்வி கேள்விகளில் வல்லராய் வயங்கிய அச்சுதானந்த சுவாமிகளால் இவர்கள் வடமொழியுந் தமிழும் உடன் கற்பிக்கப்பட்டு வளர்ந்தனர் என்றும் திருவாளர் நின்றை தங்கவேலு முதலியாரவர்கள் சைவம்' என்னுந் தமிழ் வெளியீட்டில் தாம் வரைந்து வெளியிட்ட நாயகரவர்களின் சுருக்கவரலாற்றிற் கூறியிருக்கின்றனர். யாம் எழுதும் இச் சுருக்க வரலாற்றுக் காலக்குறிப்புகள், முதலியாரவர்கள் காட்டிய காலக்குறிப்புகளை மெய்யெனக் காண்ே வரையப்பட்டிருக்கின்றன. இவைகளிற் பிழைகள் இருப்பின், தக்க சான்றுகள் கிடைக்குங்கால் அவை திருத்தப்படும்.

ச்

இனி நாயகரவர்கள் மேற்காட்டியபடி தம் குலத்திற் பிறந்து தமக்குக் குருவாய் வாய்த்த அச்சுதானந்த சுவாமிகளால் வடமொழி தென்மொழியும் மாயாவாதவுணர்ச்சியும் அறி வுறுக்கப்பட்டு வந்ததுமல்லாமல் அரசினர் கல்லூரியிலும் ங்கிலமும் தெலுங்கும் ஒருங்கு கற்பிக்கப்பட்டு நான்கு மொழிகளில் அறிவுபெறலானார்கள் நாயகரவர்களின் வட மொழிப் பயிற்சி, அம்மொழிவல்ல பார்ப்பன ஆசிரியரின் பயிற்சியை ஒப்பதன்று ; இவர்களின் பயிற்சி ஒருவகையில் அவர்களின் வடமொழிப்புலமைக்குத் தாழ்ந்ததென்றும், மற்றொரு வகையில் அதற்கு அஃது எத்தனையோ மடங்கு உயர்ந்ததென்றும் அறிஞர்கள் நன்குணர்வர். வடமொழி வல்ல பார்ப்பனப்புலவர்கள் அம்மொழியிலுள்ள இலக்கண இலக்கிய நூல்களையும், வேதங்கள் உபநிடதங் கள் சாங்கியம் முதலான தத்துவநூல்கள் புராணங்கள் முதலியவைகளையும் நன்கு நெட்டுருச்செய்து எழுத் தெண்ணிப்பாடம் ஒப்புவிக்க வல்லவர்கள் ;ஆனாலும், அவ்வந்நூல்களின் மெய்ப் பொருள்களையும், அவை ஒன்றி னொன்று மாறுபாடுறும் வழி அவற்றுட்பொருந்துவதிது பொருந் தாததிது வென்று சிக்கறுத்துணர்த்தும் முறை களையும் அவர்களிற் பெரும்பாலோர் உணராதவர்கள்; அவர்கள் அவ்வடநூல்களை ஓதுவதெல்லாம் வெற்றார வாரத்தின் பொருட்டுந், தம்மை ஏனைமக்களினும் மிகுதி யாக உயர்த்துக்கொள்ளுதற் பொருட்டுமேயாம். மற்று,

நாயகரவர்களோ வடமொழி நூல்களை நெட்டுருச்செய்து முழுப் பாடம் ஒப்புவிக்கமாட்டார்களாயினும்,

நால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/117&oldid=1587224" இலிருந்து மீள்விக்கப்பட்டது