பக்கம்:மறைமலையம் 21.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மறைமலையம் – 21

ல்

முதற்பாகத்தை இயற்றி, அதனைச் சுந்தரசிவாசாரியார் என்னும் பெரியவரொருவர்பெயராற் றமது 27-ஆம் அகவையில் வெளியிட்டமையால் நன்கறியக் கிடக்கின்றது. இந்நூல் கி. பி 1873 ஆம் ஆண்டு வெளிப்போந்தது; அதன்பின் எட்டாண்டுகள் கழித்து, அதாவது கி.பி. 1881 சிவாதிக்யரத்நாவளியின் இரண்டாம் பாகம் அவர்களால் இயற்றப்பட்டு வெளிவந்தது. இந்நூல்களில் உண்மை வழாது நடுநின்றாராய்ந்து விளக்கி யிருக்குஞ் சமய நுண்பொருள் களையும் அவற்றிற்காக மேற் கோளாய் எடுத்துக் காட்டியிருக்கும் வடமொழி தென்மொழி நூல்களையும் உற்று நோக்குவார்க்கு, நாயகரவர்கள் தமது கட்டிளமைப்பருவம் முதல் எத்தனை சமயநூல்களை எவ்வளவுகருத்தாய்க் கற்றுத் தெளிந்திருக்க வேண்டுமென்பது தெற்றென விளங்கா நிற்கும் . இவ்வாறு தாடர்பாக இவர்கள் பரந்தாழ்ந்த சமய நூலாராய்ச்சியிலேயே முனைந்து நின்றமையால், தமது முப்பத்தொன்பதாம் ஆண்டிலிருந்து வெளிப்போந்த தொல்காப்பியம், கலித்தொகை, புறநானூறு முதலான பண்டைத் தனிச் செந்தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயிற்றலிற் கருத்தூன்ற மாட்டாதவாரா னார்கள். இவ்வரும்பெருங்கருவி நூல்களெல்லாம் ருவர் தமக்கு இருபதாண்டு நிரம்புமுன்னரே பயின்று தெளியற் பாலனவாம். இருபதாண்டிற்குப்பின் அறிவு நூல்களே ஆராய்ந்தறியற்பாலன. நாயகரவர்கள் தமக்கு இருபதாண்டு நிரம்புமுன்னே கிடைத்த நன்னூல் முதலான பிற்காலச் சிற்றிலக்கணங்களையுந், திருக்குறள், நாலடியார், பெரிய லக்கியங்களையும் நன்கோதி யுணர்ந்தமையால், இருபதாண்டுக்கு மேல் அறிவு நூற் பயிற்சியிலேயே தமது கருத்தைத் தோய்விப்பாராயினர். அறிவு நூற் பயிற்சியிற் கருத்து ஈர்ப்புண்டபின், அதனை மறித்துங் கருவி நூற் பயிற்சியிற் செலுத்துதல் இயலாது. தேமாங்கனியின் சுவைகண்டவர்க்கு, அதனிற் குறைந்த சுவை யுடைய கனிகளில் விருப்பஞ் செல்லாமை இயற்கையன்றே. ஆகவே, நாயகரவர்கள் பண்டைத் தனிச்செந்தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயிலாத காரணம் இதுவாதல் கண்டு

புராணம் முதலான

கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/121&oldid=1587228" இலிருந்து மீள்விக்கப்பட்டது