பக்கம்:மறைமலையம் 21.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மறைமலையம் – 21

திருநீற்றை அணிந்து தூய சைவனானான். இதனைக் கண்ட அவ்விளைஞனின் அன்னை யார் சொல்லுக்கு அடங்கா மகிழ்ச்சி மீதூர்ந்து, “எங்கள் பார்ப்பனச் சாதியிற் பல்லாண்டு சமஸ்கிருதம் படித்த சாஸ்திரிகளெல்லாம் என் மகனைத் திருத்த மாட்டாமற் கடைசியாக நாயகரவர்களன்றோ என்மகன் கிறிஸ்துமதம் போகாமல் நமது சைவமதத்திலே நிலைப் என்று

தம்மவரிடத்தெல்லாஞ்

போனார்கள்.

பட்டான்”.

சொல்லிச்

சொல்லி மகிழ்வதானார். அங்ஙனம் நாயகரவர்களாற் றிருத்தப்பட்ட ளைஞர் ன்னாரென்பது எமக்குத் திட்டவட்டமாய்த் தெரியாது. ஆனாலும் அவ்விளைஞர் தாங் குருசாமி சர்மா' வாயிருக்கலாமென்று கருதுகின்றேம்.

இன்னும், நாகை வெளிப் பாளையஞ் சைவ சித்தாந்த சபைத் தலைவரும் மாப்பெரும் புராண நூற் பாவலரான மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் முதலான அறிஞர்களாற் பாராட்டப்பட்டவரும், எமதிளந்தைப் பருவத்தில் எமக்குச் சைவநூல் உண்மைகள் பலவற்றை அறிவுறுத்தியவருமான சோ. வீரப்பசெட்டியார் என்னும் பெரியார் சைவவொழுக் கத்திற்றலை நின்றவரேனும் மாயாவாத வேதாந்த நூற் பயிற்சியிற் மிகச் சிறந்தவராயிருந்தார். இவரை ஆசிரியராகக் காண்டு அப்பக்கத்தில் அக்காலத்தில் வேதாந்த நூலுணர்ச்சி பெற்றார் பலர். அஞ்ஞான்று சைவசித்தாந்தம் உணர்ந் தாரும், அதனைப்பிறர்க்கு உணர்த்துவாரும் மிக அரியர். யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலரவர்கள் சைவசித்தாந்தம் நன்குணர்ந்த பெரியாரேயாயினும், அவர் பெரும்பாலும் "புராணப் பிரசங்கம்" புரிவதிலேயே முனைந்து நின்றார். சைவ வைணவ மாயாவதாக் கொள்கைகளின் வேறுபாடுகளை விளங்கக் காட்டி, அவற்றுட் பொருந்து வதிது பொருந்தாத திதுவென்று பலரறிய மலைவறுத்துச் சொல்லிச் சைவ சித்தாந்தத்தைப்பரவச் செய்தவரல்லர். இறைவன் மேற்குழைந் துருகி இனிய எளிய செந்தமிழ்ப்பாக்கள் பாடிய இராமலிங்க வள்ளலாருஞ் “சீவகாருண்யப் பிரசங்கங்” கேட்பார். நெஞ்சங் கரையச் செய்து அதனையே எங்கும் பரவச்செய்தாரன்றித் தாம் மிக நுட்பமாய் அரிதினுணர்ந்த சைவசித்தாந்தப் பாருள்களையெல்லாம் எல்லார்க்கும் விரித்தெடுத்துச்

|

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/125&oldid=1587232" இலிருந்து மீள்விக்கப்பட்டது