பக்கம்:மறைமலையம் 21.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

சோமசுந்தர நாயகர் வரலாறு

125

பிராமணங்கள் எழுதிய காலத்திலேதான், அவ்விரு குழுவினரும் ஒன்று கூடித்தாம் மட்டுமே விராட் புருஷனது முகத்தினின்றுந் தோன்றிய 'பிராமணர்' ஆவரென்றும், ஏனைஅரசரும், வணிகரும், ஏவலாளரும் அவன்றன் தோள், தாடை, அடிகளினின்றுந் தோன்றிப் பிராமணராகிய தமக்குக் கீழ் நின்று, தமக்காவன செய்தற்காக வகுக்கப் பட்டனரென்றும் ஒரு கதை கட்டி, அதனை இருக்குவேதத்தின் றுதியிலும், அதற்குப் பின் வந்த நூல்களிலும் நுழைத்து விடுவாராயினார்.

இவ்வாறு ஆரியரும் அவருடன் கலந்து கொண்ட இருப்பிறப்பாளருந் தம்மைப் பிராமணரென்னும் மிக வுயர்ந்த ஒரு தனி வகுப்பினராக்கிக் கொண்டு மற்றை மக்களையெல்லாந் தமக்காவன செய்யுங்கீழ் மக்களாக எட்ட நிறுத்தி வைத்து, ஆரியச் சிறு தெய்வவணக்கத்தையும், அவற்றிற்காக எடுக்கும் வெறியாட்டு வேள்விகளையும் மேன்மேற்பெருக்கி, எங்கும் இரத்தக் காடாக்கிக் குடியுங் கொலையும் வரையில் காமமுமேயாண்டும் பரவ, அவ் வாற்றால் தமிழரது செல்வமெல்லாம் உரிஞ்சி, அவரையும் அவர் பாழ்படுத்தி வந்தமை கல்விவல்ல தமிழாசிரியர்க்குந் தமிழ்வேந்தர்க்கும் பிறர்க்கும் பெருந்துயரத்தை விளைப்ப தாயிற்று, அதனால், அத்தமிழறிவுமிக்க சான்றோர்கள் சாங்கியம், 'யோகம்', 'உபநிடதம்’,‘புராணம்' முதலான நூல்களை அப்பார்ப்பனக் குழுவினர் வழங்கிய வட மொழி யிலேயே இயற்றி, பிறந்து இருந்து இறந்து போன மக்களின் ஆவிகளாகிய சிறு தெய்வங்களை வணங்குவதும், அவற்றிற் காக ஆடு மாடு குதிரைகளையும் மக்களையுங் கொலை செய்துங் கட்குடித்தும் மகளிர்ப் புணர்ந்தும் வெறியாட்டு வேள்விகள் வேட்பதும் பெருந்தீவினையாமென்றும், எல்லாம் வல்ல ஒரே முழு முதற்கடவுளாகிய சிவத்தை அன்பினால் அகங்குழைந் துருகி வாழ்த்துவதும் வணங்குவதுமே பிறவியைத் தூய்தாக்கு மென்றும், ஒரே கடவுளாற் படைக்கப்பட்டு அவர்க்குப் புதல்வர்களாம் பேருரிமை வாய்ந்த மக்களுட் பிறப்பினால் உயர்வு தாழ்வு சிறிதுமில்லை யென்றும், மக்கட்பிறவியைப் பாழாக்குங்குடி கொலை தீயகாமம் சிறு தெய்வவணக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/158&oldid=1587265" இலிருந்து மீள்விக்கப்பட்டது