பக்கம்:மறைமலையம் 21.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

❖ 21❖ மறைமலையம் – 21

இனித் தாயுமான சுவாமிகளுக்குப் பின், வடமொழிக் கடலுந்தென்றமிழ்க் கடலும் ஒருங்கு நிலை கண்டுணர்ந்த மாதவச் சிவஞானமுனிவரர் தோன்றி வடமொழி மெய்ந் நூற்கருத்துஞ் செந்தமிழ் முடிபுந் தேற்றிச் சிவஞான போதச் சிற்றுரை பேருரைகளுந் தொல்காப்பியச்சூத்திர விருத்தியும் இயற்றியுதவினர். இவ்வருந்தவப்பேராசிரியர் அருளிச் செய்த உரை நூல்களே, தமிழின் முதன்மையுஞ்சிவத்தின் முதன்மையும் ஐயந்திரிபற உணர்த்தித் தமிழ்மக்கள் பொய்ச் சமயம்புகாமற் சைவசித்தாந்தத்துறையிற் படிந்து எல்லாம் வல்ல இறைவன்றன் திருவருட் பேரின்பவமிழ்தை ஆர நுகர்ந்து இன்புற்றிருக்கச் செய்யுந் திறத்தவாய்த்துலங் கலாயின.

என்றாலும், வடமொழிப் பின்னூல்கள் இயற்றிய மாயா வாத வைணவக் கொள்கையினர், வடமொழிமுன்னூற் பெருங்கொள்கைகளுக்கு முழுமாறாகப் புனைந்து கட்டிய புனைசுருட்டுகள் அத்தனையும் ஒருங்கே தெரிந்து அவற்றால் எம் போல்வார் மயங்காமல் இருத்தற்கு ஆசிரியர் சிவஞான முனிவர் தம் உரை நூல்களும் உதவி செய்வன அல்ல. மற்று, ஆசிரியர் சோமசுந்தர நாயகர் இயற்றி வெளியிட்ட நூல்களே மாயாவாத வைணவக் குழுவினர் வடமொழியிற் செய்தி ருக்கும் புனை சுருட்டுகள் முற்றும் விளங்க எடுத்துக்காட்டி, அவற்றின் பொய்ம்மையில் 6 எவரும் மயங்காதிருக்கச் செய்யும் அரும்பெருந்திறல் வாய்ந்தனவாய்த் திகழ்கின்றன.

நாயகரவர்கள் இத்தகைய தம் அருமருந்தன்ன நூல் களிற் சிலவற்றைத் தாம் சென்னை நகராண்மைக் கழகத் தில் அமர்தற்கு முன்னும், அதன்கண் அமர்ந்து அதன் வேலையைச் செவ்வனே பார்த்துவந்த காலத்தும் இயற்றி வெளியிட்டு வந்தனராயினும், அவர்கள் தமது 35 ஆம் ஆண்டில் அவ் வேலையின்றும் விலகிய பின்னரேதான், தம்மறிவையும் முயற்சியையும் மாயாவாத வைணவ மறுப்புரை நூல்கள் இயற்றுவதிலும், இத்தென்னாடெங்குஞ் சென்று நூற்றுக் கணக்கான விரிவுரைகள் நிகழ்த்துவதிலும் முழுதுஞ்

G

செலுத்தலானார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/165&oldid=1587272" இலிருந்து மீள்விக்கப்பட்டது