பக்கம்:மறைமலையம் 21.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மறைமலையம் – 21

சமர்த்தநம் முதலான விளக்கவுரைகள் வரையலாயின ரன்பதனாலும் நீலகண்ட பாடியமே வேதாந்த சூத்திரத்திற்கு மெய்யுரையாதலும், சங்கரபாடியம் அங்ஙனம் அதற்கு மெய்யுரையாகாமையும் நன்கு விளங்கா நிற்கும். ஆகவே, மெய்யுரையல்லாத சங்கரபாடியத்தை ஒரு துணையாகக் கொண்டு வைணவர் சிலர் சைவ சமயத்தை மறுக்கப் புக்கது, உமிக்குற்றிக் கைசலிப்பார் கதையாகவே முடிந்தமை

காண்க.

க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/187&oldid=1587294" இலிருந்து மீள்விக்கப்பட்டது