பக்கம்:மறைமலையம் 21.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

மறைமலையம் – 21

(பிரமஞானத்தினை) விளக்குவதாகும். இதன் முதன்மந்திரம்

வருமாறு:

“மாயைக்குத் தலைவனான ஈசன் தனது முழுமுதலாற்ற லால் எல்லா உலகங்களையும் நடாத்துகின்றான்; இறைவனாக அவன் ஒருவனேயுளன். படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களையும் புரிபவன் அவன் ஒருவனே யாவன்; இவ்வியல்பினனான இறைவனையுணர்பவர் நிலையினையடைகின்றனர்”.

இறவா

இம் முதல் மந்திரத்தின்கண் வேள்விவேட்டலைப் பற்றியாவது, வேள்விக்குத் தலைவன் விஷ்ணு என்பதைப் பற்றியாவது, தேவர் கட்கு அவியுணவு அளித்தலைப் பற்றியாவது ஏதொரு குறிப்பு மில்லாமை தெற்றென விளங்கா நிற்கின்றது. இதனையடுத்து வரும் இரண்டாம் மந்திரம்:

உருத்திரன் ஒருவனேயுளன்; அவனுக்கு இரண்டாவதாக ஏதொன்றும் நிற்கவில்லை; தன் இறைமைச் செயலால் இவ்வுலகங்களை நடாத்தும் அவன் இவ்வுலகங்களையெல்லாம் படைத்து, எல்லா உயிர்களுக்கும் உயிராய்த் திகழ்கின்றான்; அவை உயிரோடு உலவுங்காறும் அவைகளைக் காப்பவனும் அவனே; முடிவுகாலத்திற் சினந்து அவற்றை அழிப்பவனும் அவனேயாவன்” என நுவல்கின்றது.

இனி, இதற்குப் பின்னதான மூன்றாம் மந்திரம் வருமாறு:

“அவன் எவ்விடங்களிலுங் கண்கள் உடையன்; எவ்விடங் களிலும் முகங்கள் உடையன்; எவ்விடங்களிலுந் தோள்கள் உடையன்; எவ்விடங்களிலும் அடிகள் உடையன்; ஒளிவடிவின

னான அவன் ஒருவனே மண்ணையும் விண்ணையுந் தோற்றுவிக்கின்ற காலத்து, மக்களுக்குத் தோள்களையும் பறவைகளுக்கு இறக்கைகளையும் அமைத்தனன்.

ம்

மூன்று

ஒன்றன்பின் ஒன்றாய்ப் போந்த மந்திரங்களும், எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் முதல்வனாய் உள்ளான் ஒரு கடவுளேயல்லால் மற்றுமொரு கடவுள் இல்லை யென்றும், இவை தம்மைப் படைத்துக் காத்து அழிப்பவன் அவன் ஒருவனேயாகவும் அம் முத்தொழில் களையுஞ் செய்தற்குத் தனித்தனியே மூன்று கடவுளர் உளர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/211&oldid=1587318" இலிருந்து மீள்விக்கப்பட்டது