பக்கம்:மறைமலையம் 21.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201

அன்பர்களே!

1. பிறவி எடுத்ததன் நோக்கம்

இச்சபையார் கேட்டுக் கொண்டதற் கிணங்கிக் ‘கடவுள்' நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா' என்பதனைப் பொருளாகக் கொண்டு ஒரு விரிவுரை நிகழ்த்தலாமென்று துணிந்தேன். இக்காலநிலைக்கு ஏற்றபடி, எதனைப்பற்றிப் பேச

லாம்

என்று ஆராய்ந்து பார்க்கையில், மெய்யல்லாத கோட்பாடு களைச் சைவசமயமாகப் பிறழ உணர்ந்து அவற்றையே சைவ சமயமென நம்மனோர் மயங்கிக் கிடத்தலானும், பொய்யை மெய்யாக மயங்கிக் கிடக்கும் வரையில் அம்மயக்க உணர்ச்சிக்கு ஏதுவான அறியாமை நம்மை டு நீங்காமையின் நாம் எல்லாம்வல்ல சிவத்தின் நிலையை உணர்ந்து இப் பிறவித் துன்பத்தை நீக்குத லாகாமையானும், இந்தப் பொருளையே பேசுவது இன்றியமையாததாக எனக்குத்

தோன்றியது. ஏனென்றாற், பிறவி நீங்காதவரையில்,

அப்பிறவியை நீக்கும் முயற்சி உண்மையில் நடவாத வரையில், அம்முயற்சி நடை பெறுதற்கு மெய்யுணர்ச்சி பெறாதவரையில் நாம் இப்பிறவி எடுத்ததன் நோக்கம் நிறைவேறாமலே போய்விடும்.

நமக்கு அரிதிற் கிடைத்திருக்கும் மக்கட் பிறவியின் நோக்கம் நிறைவேறாதாயின் நாம் பிறவிப்பயனை அடுத்தடுத்து இழந்து பிறவித் துன்பத்திற் கிடந்து சுழலுவதோடு, நமக்குப் பிறவிகளை ஓயாது கொடுத் தற்கு ஏதுவாயுள்ள பலர்க்கும் நாம் மீளாத துன்பத் தையுங் கொடுத்தவராவோம். எம்மை ஈன்றெடுக்குந் தாய்மார் எத்தனைமுறை எம்மைத் தம் வயிற்றகத்தே சுமந்து சுமந்து துன்புறு கின்றனர்! எம்மைப் பெற்றெடுத்து வளர்ப்பதற்கு எத்தனைமுறை அலக்கணூறு கின்றனர்! இது மட்டுமோ, எம்மைப் படைக்கும் இறைவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/234&oldid=1587341" இலிருந்து மீள்விக்கப்பட்டது