பக்கம்:மறைமலையம் 21.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

209

களாவன எவையென்று ஆராய்வோமாயின், அவை வண்ணம் வடிவு அளவு சுவை யென்னும் நால்வகையில் அடங்கும். வண்ணமாவது சிவப்பு, நீலம், மஞ்சள், கறுப்பு, ஊதா, பச்சை, வெள்ளை என்னும் எழுவகை நிறங்களேயாகும். வடிவாவது வட்டம், நாற்கோணம், முக்கோணம் முதலியனவாகும். அளவாவது எண்ணலளவை, எடுத்தலளவை, முகத்தலளவை, நீட்டலளவையென நான்காம். சுவையானது தித்திப்பு,புளிப்பு, கார்ப்பு, கைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என அறுவகைச் சுவை களேயாகும். இங்ஙனம் வகுத்துக் கொண்ட இயல்புகளுள் கடவுள் எந்த நிறத்தினர், எந்த வடிவினர், எந்த அளவினர், எந்த சுவையினர் என்று எவரைக் கேட்பினும், அவர் இன்ன நிறத்தின ராயிருப்பர், இன்ன வடிவினராயிருப்பர், இன்ன அளவினரா யிருப்பர், இன்ன சுவையினராயிருப்பர் என உறுதிப்படுத்திச் சொல்ல மாட்டுவாரல்லர். ஆகவே கடவுள் பொருள்களின் எல்லையினையும் இடத்தினெல்லையினையுங் காலத்தினெல் லையினையுங் கடந்து நிற்பவராதலோடு, அவ்வப் பொருள் களின் இயல்புகளிலேயும் அடங்காதவராய் அவற்றை யுங் கடந்து நிற்றல் எல்லார்க்கும் ஒத்த கருத்தேயாதல் இனிது விளங்குகின்றதன்றோ? இங்ஙனமாக எல்லாவற்றையும் எல்லா வற்றினியல்புகளையுங் கடவுள் கடந்து நிற்பவராய் உள்ளவர் என்பது கடவுள் என்னுஞ் சொற்பொருளால் நன்கு தெளியக் கிடக்கின்றமையின், இவ் வுண்மையைப் பல்லாயிர ஆண்டு களுக்கு முன்னமே ஆராய்ந்துணர்ந்த நம் பழந் தமிழாசிரியர்கள், நம்மா லறியப்பட்ட பொருள்வகைகளிலும் உயிர்வகைகளிலும் அவ் உயிர்களின் தோற்ற ஒடுக்க வகை களிலும் ஒன்றாக அக் கடவுளைக் கீழ்க் கொணர்ந்து வைத்துச் சொல்லுதற்கு ஒரு சிறிதும் மன மிசையாதவர்களாய் அவனைப் பிறவான் இறவான் என்றே யாண்டும் வலியுறுத்திச் சொல்வா ராயினர். சிரியர் தொல்காப்பியனார், பிறப்பு இறப்புக்களுக்கு வித்தாகிய வினையினின்றும் இறைவன் நீங்கி நிற்பவன் என்பதை

“வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்

ரு

என்றும், பிறப்புக்கு முதல்வரான தாயுந் தந்தையும் இல்லாதவன் இறைவன் என்பதை மாணிக்கவாசகப் பெருமான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/242&oldid=1587349" இலிருந்து மீள்விக்கப்பட்டது