பக்கம்:மறைமலையம் 21.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

66

மறைமலையம் – 21

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடி”

என்றுந், திருஞானசம்பந்தப் பெருமான்,

“வெந்த சாம்பல் விரையெனப் பூசியே

தந்தை யாரொடு தாயிலர் தம்மையே

சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால்

எந்தை யார்அவர் எவ்வகை யார்கொலோ,

என்றுஞ், சமண்சமய முனிவரான இளங்கோவடிகள்,

66

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்"

என்றும் அருளிச் செய்வாராயினர். பிற்காலத்து வைணவ சமயத்தில் உறைத்துநின்ற வில்லிபுத்தூராழ்வாருங் கூட வேட்டு வன்வடியில் வந்து அருச்சுனனொடு போர்புரிந்து அவன் கைவில்லால் அடியுண்ட இறைவனைப் பற்றி மொழியும் போது,

“வேதமடி யுண்டன விரிந்தபல ஆகம விதங்களடி யுண்டன ஓரைம்

பூதமடி யுண்டனவி நாழிகைமு தற்புகல்செய் பொழுதொடு சலிப்பில் பொருளின்

பேதமடி யுண்டன பிறப்பிலி இறப்பிலி பிறங்கல் அரசன்றன் மகளார்

நாதம்அம லன்சமர வேடவடி வங்கொடு

நரன்கையடி யுண்ட பொழுதே."

என்று இவ் உண்மையை ஒளியாமல் நன்கெடுத்துக் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/243&oldid=1587350" இலிருந்து மீள்விக்கப்பட்டது