பக்கம்:மறைமலையம் 21.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

L

மறைமலையம் – 21

உடன்படுவாள்

அங்கே செய்யவேண்டிய ஒழுங்குகள் இன்னுஞ் செய்து முடிக்கப் படாமையாலும் அவளும் அம் மன்னனும் அங்கே தனியிருத்தல் நேர்ந்தது. இவ்வாறு தனக்கு நேரம் வாய்த்ததைக் கண்டு மகிழ்ந்த அவ்வரசன் அப் பணிப்பெண்ணை அருகழைத்து ‘நங்காய்! யான் நெடுநாளாய் நின்மேல் மையல் கொண்டேன். அம் மையலை நிறைவேற்றிக் கொள்ளுதற்கு ப்போது தக்கநேரம் வாய்த்திருத்தலால் நீ என் கருத்துக்கு இணங்குதல் வேண்டும்' என்றான். மன்னன் இங்ஙனங் காமவெறி கொண்டு பேசுவதைக் கண்ட அம் மாது இப்போது வனை மறுத்தால் என்னைத் துன்புறுத்துவான் என நினைந்து அவனுக்கு போல் அவனை நோக்கி 'மன்னர்பெருமானே! அதற்கென்ன தடை? அடியேன் தங்கள் கருத்தின்படி நடக்கக் காத்திருக்கின்றேன். இப்போது யான் யாது செய்தல் வேண்டும்? என்று வினாயினாள். அதற்கு அவ்வரசன் ‘அம்மாளிகையின் நாற்புறத்துமுள்ள கதவுகளை யெல்லாம் நம்மை எவருங் காணாதபடி அடைத்துவிடு என்றான். அவள் அவ்வாறே எல்லாக் கதவுகளையும் அடைத்துவிட்டு அவன் எதிரே வந்துநிற்க, அவன் அவளை நோக்கி, 'எல்லாக் கதவு களையும் அடைத்து வந்தனையா?' என்று கேட்டான். அதற் கவள் ம் மன்னனே! எல்லாக் கதவுகளையும் அடைத்து விட்டேன்; ஆனால், ஒரு கதவை மட்டும் என்னால் அடைக்க முடியவில்லை. அதன்வழியாக நம்மை ஒருவர் மட்டும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார். என்செய்வேன்!' என்றாள். அச் சொற்கேட்டு அரசன் திடுக்கிட்டு, ‘மாதராய்! அங்ஙனம் அடைக்கக்கூடாமலிருப்பது எந்தக் கதவு? அதன்வழியாக உற்றுப் பார்ப்பவர் யார்?” என்று வெருண்டு வினாயினான். அதற்கவள் ‘எங்குமுள்ள கடவுளின் கண்களாகிய கதவுகளை என்னால் அடைக்க முடியவில்லை. அவற்றின் வழியாக அவர்தாம் நம்மை உற்று நோக்குகின்றார்’, என்று அமைதியாக மொழிந்தாள். அதனைக் கேட்டதும், அவ்வரசன் கடவுள் நினைவு வரப் பெற்று, அச்சமுடையவனாகி 'நங்காய்! நீ இவ்விடத்தை விட்டுப் போய்விடு' என்று சொல்ல, அவளும் அவன் கொடுமைக்குத் தப்பி மீண்டாள். பாருங்கள் அன்பர்களே! அந்நேரத்தில் அப் பெண் தன் கூர்த்த அறிவினாற் கடவுள் நினைவை அவ்வரசற்கு வருவித்தமை யாலன்றோ, தான் விரும்பியதை எவ்வகையாலேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/285&oldid=1587392" இலிருந்து மீள்விக்கப்பட்டது