பக்கம்:மறைமலையம் 22.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

6. நரியைப்பரியாக்கியது அடிகள் பொருட்டே

இனி, அரசனையுள்ளிட் டெல்லாருந் தத்தம் இருக்கை சேர்ந்தபின் பகலவனும் மேல்பால் மறைந்தனன். குதிரைத் துறைக் காவலரும் அக் குதிரைகளைப் பந்திகளில் நிரல் படக் கட்டி, அவை தமக்கு உணவாகப் பருப்பும் நெய்யுங் கருப்புக் கட்டியும் சேர்த்துக் கலந்து, இனிய புல்லைக் கொணர்ந்து இட்டுப், பயறுங் கொள்ளுங் கடலையுந் துவரையுங் கழுவி வேவுவித்துப் பையில் நிறையப் பெய்து கட்டி எவ்வளவோ முயன்ற தீனி கொடுத்தும், அவைகள் அவற்றை அயின்றில. பின்னர் வரவர இருள்மிகுந்து நடுயாமம் ஆதலும், வந்த அப் புதுப்பரிகளெல்லாம் நரிகளாக உருமாறி, அப்பந்திகளில் தமக்கு முன்னரே யிருந்த குதிரைகளின் அடிவயிற்றைக் கடித்து உள்ளுள்ள குடர்களைப் பிடுங்கு வனவும், கழுத்தைக் கடித்து இரத்தத்தை மாந்துவனவும், உயிர்துறந்து கீழ்வீழ்ந்த பழங் குதிரைகளின் உடம்பைக் கிழித்து உள்ளுள்ள தசை நிணம் மூளை முதலியவற்றைக் கிண்டிக் கிளறித் தின்பனவுமாய்ப் பந்தியிலிருந்த பழங் குதிரைகளை யெல்லாம் ஒருமிக்கக் கொன்று, பிறகு அவற்றினின்றும் புறப்பட்டுத்

L

அங்

தெருக்களிலும், ஆவணங்களிலும், கணங்களிலும், வீடுகள் மடங்கள் சாவடிகளென்னும் இவற்றின் முற்றங்களிலுந் திரள் திரளாய்ச் சென்று ஊளையிட்டு ஓடுவவாயின. இந் நிகழ்ச்சியைக் கண்டு வெருக்கொண்ட பரித்துறைக் காவலரும் நகர்க் காவலரும் அவற்றை அடித்துக் கொல்லுதற்குப் படைக் கலங்களோடு எதிர்த்தும், அந் நரித்தொகுதிகள் அவர்க்கு அஞ்சாவாய்த் தாமும் அவரை எதிர்ப்பவாயின. இதற்குள் ஊரிலுள்ள குடிமக்க ளெல்லாருந் துயிலினின்று திடுமென எழுந்து கூக்குரலிடுவா ராயினர், இது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/120&oldid=1587566" இலிருந்து மீள்விக்கப்பட்டது