பக்கம்:மறைமலையம் 22.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ட

92

மறைமலையம் 22

ஏவலரிடம் ஒப்பித்து வருத்தினானாதல் வேண்டும். அங்ஙனம் அவரை வருத்திய அந்நாளும் அத் திங்களும் கார்காலத்து வான் தலைப்பெயலை நிறையப்பெய்தற்குரிய காலமேயாத லின், அவ்வாறு கார்காலத்தில் இயற்கையாகவே மழை மிகப் பெய்து வைகையாறு பெருகியதனை இறைவனருளால் நிகழ்ந்ததெனக் கூறுதல் யாங்ஙனமெனிற் கூறுவாம். மாணிக்கவாசகப் பெருமானை அமைச்சராகப் பெற்ற பாண்டியன் சிவபெருமானிடத்தும் அவனடியாரிடத்தும் முதிர்ந்த பேரன்பு கொண்டவன் அல்லன்; வேற்றரசர் மேற் படையெடுத்துச் சென்று அவரை வென்று அவர்தம் நாடுகளைக் கைப்பற்றுதலிலேயே கருத்துடையவன். குடிகளிடத்து வாங்கிய இறைப்பொருள்களை அவர்களுடை நன்மைகளுக்காகப் பயன்படுத்தாமல், அவற்றைக் கொண்டு உயர்ந்த வாம்பரிகள் திரட்டித் தனது குதிரைப் படையை வலிதாக்கி வேற்றரசரோடு போர்புரிதற்கு முனைந்தான். அந் நினைவுடைய அவன் றந்தபொருள் அவனோடு ஒத்த நினைவுடைய ஓர் அமைச்சர் கைப்படாமற், சிவபிரான் றிருவடிக்கட் பேரன்பு பூண்டு பூ பிறவி வேரறுக்கும் நினைவுடைய அடிகள் கையிற்பட்டமையால், அந் நற்பொருள் பலவகையான அறங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது தன் பொருளாகாமல் தன் குடிகளால் தரப்பட்ட அப் பொருள் அக் குடிமக்களின் நன்மையின் பொருட்டே செலவழிக்கப் பட்டதனை உணர்ந்தும் பாண்டியன் அதற்குடன்படாமல் அப்பொருளுக்குக் குதிரை கொள்ளு தலிலேயே கருத்துவைத்து, அக் கருததின்படி நடவாராயின் அடிகளை வருத்துவதற்கே உறுதி கொண்டிருந்தான். ஆகவே, தன்னடியவரைப் பாதுகாத்தற் பொருட்டும், பாண்டியனது போர் வேட்கையை அவித்து அவனது செருக்கை அடக்குதற்பொருட்டுமே இறைவன் நரிகளைப் பரிகளாக்கிக் கொணரத் திருவுளம் இசைந்தான்.

இனிப், பரிகள் திரும்ப நரிகளாய் உருமாறி ஓடிப் போகக் கண்டும் அப் பாண்டியன் உளந்திருந்தி அடிகளின் பருமையுணரானாய் அவரைப் பெரிதும் வருத்துவ னென்பதும், அங்ஙனம் வருத்தும்வழி மழையை மிகப் பொழிவித்து வைகை யாற்றைப் பெருக்கி வெள்ளம் கரைபுரண்டோடி நகர்க்குட் புகுமாறு செய்வித்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/125&oldid=1587571" இலிருந்து மீள்விக்கப்பட்டது