பக்கம்:மறைமலையம் 22.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மறைமலையம்

22

மறுத்துரைத்தார். மேலும், அத்தூதுவர் “நீர் ஊரில் ஐயம் ஏற்று உண்டாலும், உமக்குப் பிறிதொரு முயற்சி இல்லை யானாலும், தனது நாட்டில் இருப்பார் எல்லாரையுங் காத்தல் மன்னற்குக் கடனாதலால், எம் அரசன் விருப்பப்படி நீர் வருதல் வேண்டும்,” என்று மொழிந்து மீண்டும் அழைப்ப அவ்வடியாரும் அதற்கு இசைந்து அவருடன் ஏகினார்.

தூதுவர் அவரை அரண்மனையினுள்ளே அழைத்துப் போய்ப், புத்த குருவினுடன் அத்தாணிமண்டபத்தே வைகி யிருக்கும் மன்னவன் எதிரே விடுத்தார். அம் மாதவரும் அவ்வரசன் அருகே சென்று ‘பொன்னம்பலம்' எனக் கூறிய மாந்தார். அச் சொற்கேட்ட அப் புத்தமன்னன் அவ்வடியாரை நோக்கி, “இப்போது நீர் 'பொன்னம்பலம்' எனக் கூறியது என்னை?” என்று வினவினான். அதற்கு அவர் “சோழ அரசராற் செங்கோல் செலுத்தப் படுங் காவிரி நாட்டின்கண் தில்லை யம்பலம் என்று ஒன்று உளது. அதுவே இந்நிலவுலகத்தில் முதற்கண் உண்டாகிய திருக்கோயிலாகும்; இந் நிலவுடம் பிற்கு நெஞ்சத் தாமரைபோல் வயங்காநின்ற அத்திருக் கோயிலினுட் பொன்னம்பலம் என ஒன்றுளது; இவ்வுடம் பினகத்தே எல்லா உயிர்களின் நெஞ்சத்தாமரையின் வெளியில் இறைவனது இயக்கமானது நடைபெற்று இவ்வுடம்பின் கண் உயிர் உலவுதற்கு உதவுதல்போல உயிரோடு கூடிய இவ் வுடம்புகள் உலவுதற் பொருட்டும் இந் நிலவுடம்பை நிலைபெறுத்துவான் வேண்டி இறைவன் அதன் நெஞ்சம் போல்வதாகிய பொன்னம்பலத்திலே இடை டையறாது ஆடுதல் செய்து உதவிபுரிகின்றான். மனுவின் மைந்தன் ஒருவன் கொண்ட தொழுநோயை மாற்றி அவனது உடம்பினைப் பொன்போல் ஒளிரச்செய்த சிவகங்கை யென்னுந் திருக் குளமும் அத் திருக்கோயிலினுள் உண்டு; அத் திருக்குளத்தின் கண் மெய்யன்புடன் மூழ்கியெழுந்து பொன்னம்பலத்தே ஐந்தொழில் அருட்கூத்து இயற்றா நின்ற இறைவன்றன் றிருவுருவை உள்ளம் நீராய் உருகித் தொழுவார்க்கு இவ் வுலகில் மீண்டும் பிறந்து வருந்தா வீட்டுநெறி எளிதிற் கிட்டும். த்துணைப் பெருஞ்சிறப்புடையதான ‘பொன்னம்பலத்’தை ஒருகாற் சொல்லும்; அது, 'சிவ' எனுந் திருமறையை இருபத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/151&oldid=1587597" இலிருந்து மீள்விக்கப்பட்டது