பக்கம்:மறைமலையம் 22.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

121

திருவாதவூரடிகள் இருக்கும் அடவிநோக்கிச் சென்றனர். அடிகளோ புறத்துணர்ச்சி சிறிதும் இல்லாராய்ச் சிவபிரான் றிருவடிக்கண் முழுதும் பதிந்த நினைவினராய் இருப்ப, அவரை அழைக்கச் சென்ற அந்தணர்கள் அவரது அசைவற்ற தவநிலையினையும், அவர் தமது வருகையையும் உணரா ராயிருத்தலையுங் கண்டு நிரம்ப மனம் வருந்தித் தத்தம் மயைகஞ்சென்று அன்றிரவு துயில் கொள்கையில் முன்னாட் கனவிற் றோன்றிய தவவுருவம் இந்நாட்கனவினுந் தோன்றி 'அம்முனிவனை ‘மாணிக்கவாசகன்' என்னும் பெயர் சொல்லி அழைமின்கள்!" என்று மொழிந்து மறைந்தது. அது கண்டு விழித்த அந்தணர் எல்லாரும் மீண்டும் அவ்வடவி நோக்கிச் சென்று அப் பெயர் சொல்லி அழைப்ப, உடனே அடிகள் அகத்தே நினைவு ஒருங்கியநிலை கலைந்து விழித்துத், தம்பால் வந்த அவ்வந்தணர் வேண்டுகோளுக்கு இசைந்து அவ ருடன் போந்து, அம்பலக்கூத்தனை வணங்கியெழுந்து, புத்த குருவும் அவர் தம் குழாத்தினரும் ஒருங்கு கூடியிருந்த மண்டபத்தின்கண் ஏறி, அந்தணருங் கற்றாருந் துறவோருந் தம்மைப் புடைசூழ, ஆண்டு இடப்பட்ட ஓர் இருக்கை மீது அமர்ந்தருளினார்.

.

கு

அப்போது, அந்தணர்களால் முன்னரே திருமுகம் விடுத்து அழைக்கப்பட்ட சோழமன்னனும் வந்து அவ்வவைக் களத்தே புகுந்து அடிகளின் திருவடியில் வீழ்ந்து வணங்கி யெழுந்து, அவராற் பணிக்கப்பட்டவாறே அங்கிடப்பட்ட தோர் அணைமேல் அமர்ந்தனன். அங்கு அதற்கு முன்னரே வந்திருந்த ஈழ மன்னன் அச்சோழனுக்கு அடங்கி அரசு புரிவோனாதலின் அவனை வணங்கி அவனது கட்டளை பெற்றுத் தன்னிருக்கையில் இருந்தான். இருதிறத்தார் வழக்குகளையும் கேட்டு நடு நின்ற சான்றுகூறுவாரான சான்றோரும் வந்து தாமிருக்குமிடத்தே வீற்றிருந்தனர். வருதற்குரியாரெல்லாம் வந்து நிறைந்து அப்பேரவை ஒழுங்கு பெற்றபின், சோழ வேந்தன் எழுந்து அடிகளை வணங்கித் "தேவரீர் புத்த குரு கூறுங் கொள்கைகளை மறுத்துச் சைவக் கொள்கையினை நிலைநிறுத்துதற்குத் திருவுளம்பற்றுவீராக!”

66

என்று வேண்டினான். அவ்வேண்டுகோளுக்கு ஒருப்பட்ட திருவாதவூரடிகள் புத்தகுருவை நோக்கி, "நுமது கடவுளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/154&oldid=1587601" இலிருந்து மீள்விக்கப்பட்டது