பக்கம்:மறைமலையம் 22.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1✰

151

காவியாடையும் பெற்றுச் சைவ சமயந் தழீஇயினார். இவ்வருட் புதுமைகளையெல்லாங் கண்டு நெஞ்சம் நீராய்க் கரையப்பெற்ற சோழவேந்தனையுள்ளிட்டஎல்லாரும் அடிகளின் திருவடி களைச் சென்னி மேற்சூடிப், பின் அம்பலக் கூத்தனை வணங்கி, அடிகள் பால் விடைபெற்றுத், தத்தம் இருப்பிடஞ் சேர்ந்தனர். பின்னர்த் திருவாதவூரடிகள் அப் புத்த குருவின் மாணாக்கர் இருபது பெயர் வினாய இருபது வினாக்களையும் ஊமை தீர்ந்து இலங்கை மன்னன் புதல்வி அவை தமக்குக் கூறிய இருபது விடைகளையும் அமைத்துத் ‘திருச்சாழல்' இருபது பாட்டுக்கள் அருளிச் செய்தார் என்பது.

தோல்வியுற்ற புத்தர் உளந்திருந்திச் சைவ சமயந் தழீஇயினார் என்னும் அவ்வளவே திருவாதவூரர் புராணங் கூறாநிற்கப், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடலோ அங்ஙனந் தோல்வியுற்ற புத்தரைச் சோழவேந்தன் சக்கிலிட்டு அரைப்பித்தான் என்னுங் கொடியதொரு பொய்க் கதை கட்டிவிட்டது சைவசமயத்திற் றலைசிறந்து நிற்குங் கொள்கை அருளொழுக்கத்தைப் பற்றியதேயாகும். சைவசமயத்திற்கு உயர்வு கூறுவேமெனப் புகுந்து அதன் கொள்கைக்கு மாறான அறக்கொடிய நிகழ்ச்சிகளைப் பொய்யாக அதன் மேலேற்றிச் சான்றோரெல்லாம் அதனைப் பழிக்குமாறு

ப்

பொய்ப்புன்செயல் புரிந்த பரஞ்சோதி முனிவர்தம் இழுக்குரை பெரிதும் அருவருக்கற்பாலதொன்றாம். இங்ஙனமே தமிழ்ச் 'சிவதருமோத் தரம்' இயற்றினவர் புறச்சமயம் புக்காரைக் கொல்க வென அறிவுறுத்தியதும் சைவ அருளொழுக்கத்திற்கு முற்றும் மாறாயிருத்தலின் அதுவும் ஆன்றோரால் அருவருத்தொதுக்கற் பாலதாம். "விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்தே, எரிவினாற் சான்னாரேனும் எம்பிராற்கு ஏற்ற தாமே,” என்று சைவசமய ஆசிரியரான திருநாவுக்கரசடிகளும், “அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ் அவர் பொருளாய்," என்று சந்தான ஆசிரியராகிய அருணந்தி யடிகளும் அறிவுறுத்திய சைவ அருளொழுக்கப் பான்மையை உணரவல்லார்க்குப் பரஞ்சோதி முனிவருரை அறக்கொடிய பொய்யுரையாதல் நன்கு விளங்கும். தமது புத்தசமயக் கொள்கையைப் பரப்பவந்த அவ்வளவே யன்றிச், சைவசமயத்தவர்க்கு வேறு ஏதொரு தீங்குஞ்செய்யாத அப் புத்தர்களை, அருளொழுக்கமே தமக்கு யிராய்க்கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/184&oldid=1587631" இலிருந்து மீள்விக்கப்பட்டது