பக்கம்:மறைமலையம் 22.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

――

1✰

165

குடியும் மலிந்த வெறியாட்டு வேள்விகளையே மிக்கெடுத்துச் சொல்லுதலானும் அவ்வேதநூல் உணர்ச்சி கொண்டும், அவ்வேதங்களை ஓதுவாரான பார்ப்பனர்தம் உதவிகொண்டும் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளான சிவத்தையறிதல் செல்லாதென்பது கோதமர்க்கு உடம்பாடாதல் போலவே, சைவசமய ஆசிரியர்க்கும் உடம்பாடாதல் மேலெடுத்துக் காட்டிய அவர்தந் திருமொழிகளால் நன்குவிளங்கும். இதனை இன்னும்,

“வேதநான்கும் ஓலமிட்டு வணங்கும் நின்னை”

"மறைஈறு அறியா மறையோனே”

"மறையில் ஈறுமுன் தொடரொணாதநீ” “பண்டாய நான்மறையும் பால்அணுகா மால் அயனுங், கண்டாரும் இல்லை'

(திருச்சதகம், 75)

(திருச்சதகம், 85)

(திருச்சதகம், 95)

(பண்டாய நான்மறை, 1)

என்றற் றொடக்கத்துத் திருவாசகத் திருமொழிகளும் வற்புறுத் துதல் காண்க. சிவம் அன்பராலன்றிப் பிறர் எவராலும் அறியப்படாமை,

"யாவராயினும் அன்பர் அன்றி

அறியொணா மலர்ச் சோதியான்

(சென்னிப்பத்து, 1)

என்று அடிகள் தெளிவுறுத்திக் கூறுதலால் துணியப்படும்.

னி, ஆரியவேதமும், அவ்வேதத்தை ஆக்கியோரும், அது தன்னை ஓதும் பார்ப்பனரும் சிவத்தைக் கண்டவர் அல்லர் என்பது கௌதமசாக்கியர் காலத்திலேயே சான்றோர்க் கெல்லாந் தெரிந்த உண்மையாம். அதனாற் கடவுளை நேரே கண்டு அவரது திருவருளைப் பெற்றார்க் கல்லாமல் அவரைக் காணப்பெறாத ஏனையோர்க்கு அவரது உண்மைத் தன்மையைத் தெரிந்துரைக்கும் ஆற்றல் உளதாகாது என்பதே களதமர்க்குக் கருத்தாகின்றது. அறவொழுக்கத்தின் மேன்மையை அஞ்ஞான்றுள்ளார்க்குப் பலகாலும் எடுத்து விரித்துரைத்த கௌதமசாக்கியருங்கூடத் தாம் கடவுளை நேரே கண்டதாக யாண்டும் மொழியாமையாற், கடவுளின் உண்மைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/198&oldid=1587645" இலிருந்து மீள்விக்கப்பட்டது