பக்கம்:மறைமலையம் 22.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மறைமலையம் 22

விளங்காதபடி யிருந்தமையால், அவர்தம் அறஉரைகளை அதிற் பேசிற்றிலர். இவ்வாறாக கௌதமர் அறிவுறுத்திய அறவுரைகள் மாகதி, பாளி முதலான மொழிகளிலேயே முதன் முதற் பொதிந்துவைக்கப்பட்டமை யானும், அவற்றுட் பாளிமொழி நூல்களாகிய திரிபிடகங்களும் அவற்றின் கொள்கைகளும் பண்டுதொட்டு இலங்கைத் தீவிலேயே வழங்கப்பட்டு வருதலானும், இலங்கையிலுள்ள இலங்கையிலுள்ள இவ் ஈனயான வழக்கே பௌத்த மதத்தின் தொன்றுதொட்ட வழக்காமெனப் பௌத்தநூல் ஆராய்ச்சிவல்லார் இஞ்ஞான்றுங் கூறுதலானும், இலங்கையிலிருந்து வந்த புத்தர்களே மாணிக்க வாசகரோடு வழக்கிட்டவரென எல்லாப் புராணங்களும் உரைதருதலானும், மாணிக்கவாசகப் பெருமானால் மறுக்கப்ட்ட சௌத்திராந்திக பௌத்தர்தங் கொள்கைகளேயாதல் நன்கு புலனாம்.

வகள்

இனி, மகாயான பௌத்தத்திற் சேர்ந்த யோகாசார மானது அசங்கர் என்பவரால் கி.பி. நான்காம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டதாகும்2. மகாயான பௌத்தத்தின் மற்றொரு பிரிவான மாத்தியமிகமானது நாகார்ச்சுனர் என்பவராலே கி.பி. முதல் நூற்றாண்டில் தோற்றுவிக்கப் பட்டதாகும். கி.பி. 78-இல் அரசியல் பெற்றுச் செங்கோல் ஓச்சிய கானிஷ்க மன்னன் அவைக்களத்திருந்த நாற்பெரும் பௌத்த ஆசிரியரில் நாகார்ச்சுனரும் ஒருவராகச் சொல்லப் படுகின்றார்4. அறிவொன்றுமே உள்பொருளாகுமென்றும், உலகமும் உலகத்துப் பொருள்களுங் கனவுபோல் அவ்வறிவின் வெறுந்தோற்றமாய்க் காணப்படுவனவே யாதலால் அவை

3

பொருளே யாமென்றுங் கூறம் யோகாசார பௌத்தமும்; புலனுணர்வே உடல் எனத் தோன்றுதலின் அவ் வுணர்வு கெட்ட வழி உடலும் இல்லையாம், உடலின்றி அறிவு நிகழாமையின் அவ் வுடல் கெட்ட வழி அறிவும் இல்லையாம் எனக் கூறும் மாத்தியமிக பௌத்தமும் முறையே விஞ்ஞான வாதம் சூனியவாதம் என நுவலப்படும் இவ்விருவர்க்கும் முந்திய சௌத்திராந்திக பௌத்தம் எல்லாப் பொருள்களுங் கணங் கடோறுங் கெட்டுக்கெட்டுத் தோன்றும் எனக் கிளத்தலின் அது கணபங்கவாதம் எனச் சொல்லப்படும். இவ்வாறு இப் பௌத்த மதங்களெல்லாம் புறத்தே காணப்படும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/213&oldid=1587660" இலிருந்து மீள்விக்கப்பட்டது