பக்கம்:மறைமலையம் 22.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

185

எவ்வளவு இன்பம் மிகுகின்றது! எவ்வளவு அறிவு விளக்கம் உண்டாகின்றது! அறியாமையைத் தேய்த்து அறிவை மிகுக்கும் முயற்சி மேலோங்க மேலோங்க இன்பமும் மேலோங்குதல் திண்ணம்.

இவ்வுண்மை நாடோறும் எல்லாரானும் அறியப்பட்டு வரவும், இவ்வுண்மைக்கு மாறாய், ‘எல்லாந் துன்பமாகவே யிருத்தலால், அவாவை அவித்து உணர்விழந்து கற்போற் கிடத்தல் வேண்டும்' என்று கூறும் பௌத்தருரையே, அது தன்னைக் கைப்பற்றுவோர்க்குச் சோம்பலையும், அது பற்றிவரும் அறியாமையையும், அதனை யடியாகக் கொண்டு வரும் பலவகைத் துன்பங்களையும் வருவிக்கும் என்க. எதுபோலவெனின்; உடம்பைப் பாதுகாத்தற்கு உணவு இன்றியமையாததாகலின், அவாவை முற்றும் அறுத்தேம் என்பார்க்கும் உணவை விடுதல் ஆகாது; ஆகவே, கிடைத்த உணவைச் சுவைவேண்டாமல் உண்ணலாம் என்றால், ஒருவரது உடம்பிற்கு ஏற்ற உணவு பிறரொருவர்க்கு ஏலாது; ஆகவே, தமக்கு ஏலாத உணவை ஏற்றுண்பதனாலும் நோயாகிய துன்பமே உண்டாகின்றதன்றோ? சுவையில்லாமல் எருப் போலிருக்கும் உணவை உண்டற்கண்ணும் துன்பமே உண்டாகின்றதன்றோ? ஆகவே, முயற்சியும் உணர்ச்சியும் இன்றி, இன்பத்தை அவாவாம லிருப்பார்க்கும் துன்பமே வருவதல்லால் அதனால் அவரடையும் பயன் ஏதும் இன்று முயற்சியும் உணர்ச்சியும் கைவிட்டு அவா அறுக்கின்றேம் என்பார்க்கு மேன்மேலுந் துன்பமே கிளைத்தலல்லால் அத் துன்பத்தைக் களைதல் சிறிதும் ஏலாது.

6

எல்லா உயிர்களின் இயற்கையானது துன்ப நீக்கத்தை மட்டுமே நாடிநிற்கவில்லை; அத்துன்ப நீக்கத்தோடு இன்ப ஆக்கத்தையே பெரிதும் விழைந்து நிற்கின்றது. இவ்விரண்டன் பொருட்டு எல்லாவுயிர்களும் எல்லா முயற்சியும் உடையனவா யிருக்கின்றன. முயற்சியும் உணர்ச்சியும் இல்லாதவன் தனக்கு ஏலாத உணவைப் பெற்று உண்டு துன்பத்தை எய்த அவ் விரண்டும் உடையவனோ தான் நன்றாகப் பாடுபட்டுத் தேடிய பொருளால் தன் உடம்பின் நலத்திற்கு இசைந்த உணவுப் பண்டங்களை வாங்கிக் கொணர்ந்து, அவற்றைச் சுவை யுண்டாக ஒருங்குகூட்டும் வகைதெரிந்து கூட்டிச் சமைத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/218&oldid=1587665" இலிருந்து மீள்விக்கப்பட்டது