பக்கம்:மறைமலையம் 22.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

ங்க

193

யாலும் ஏமாற்றம் அடைந்து வருதலும் சைவசித் தாந்திகள் நன்குணர்வர். உலகம் இல்லை. உயிருமில்லை, கடவுளுமில்லை; எல்லாம் அறியாமையேயாம் எனக்கூறும் மறைந்த பௌத்தர் களான' மாயாவாத வேதாந்திகள் தமது சூனியவாதக் கொள்கையை மட்டுந் திறப்பாக வெளிக் காட்டினால் அதனை மக்கள் எவருங்கைக்கொள்ள மாட்டாரெனத் தெரிந்து கொண்டு சைவ சமய அடையாளங் களையும் வழிபாட்டு முறைகளையும் தாம் தழுவினமையாலே தான். அவர்கள் தமது மாயாவாதக் கொள்கையை எங்கும் பரப்ப இடம் பெற்றார்கள். பரப்பியும் என்! தாம் கூறுஞ் சூனியவாதக் கொள்கையின்படி அவர்தாமும் நடத்தல் ஏலாது பிறரை நடப்பித்தலும் ஏலாது உலகமும் உயிரும் பொய்ப்பொருள் களேயாம் என்று அவர்கள் கடைப்பிடியாய்க் கூறினும், தாம் உண்ணும் உணவையும் தாம் அணியும் திருநீறு சிவமணி காவியாடை முதலியவைகளையும் பொய்யென அகற்றி யொழுகுதல் அவர்களால் ஒரு சிறிதும் ஏலாது. உயிர்களாகிய தாமே கடவுள், கடவுளெனப் பிறிதொன்றில்லை யென வொருகாற் கடவுளை மறுத்தும், உயிர்களெல்லாம் பொய். அவ்வுயிர்களின் வேறாய்க் கடவுளே மெய்யெனப் பிறிதொரு கால் உயிர்களை மறுத்தும் பேசும் அம் மாயா வாதிகள் சிவபிரானை வழிபடுதலும் அவன் திருவடிக்குத் தொண்டு செய்தலும் நீக்கமாட்டாராயிருக்கின்றனர்; இஃது ஏன் எனின், இவ்வாறு செய்யாவிட்டால் தம்மை உலகத்தார் ஒரு பொருட்டாக வையார் என்பதை அவர் நன்குணர்தலினாலே யாம் என்க. எல்லாம்வல்ல கடவுளிடத்தே பிரிவற நிற்கும் மாயை என்பதொன்று உண்டென்றும், அம்மாயையானது அக் கடவுளைக் கட்டுப்படுத்தி அதன் அறிவையும் ஆற்றலையும் இழப்பித்து, அது, தன்னையே இவ் வுலகமாகவும் உயிர்களாகவுங் காணும்படி செய்து விட்டதென்றும், இங்ஙனங் கடவுளினும் வல்லதாக அவராற் சொல்லப்படும் அம் மாயையானது அறியாமையுருவாய் எவற்றையும் மறைத்திருத்தலின் யாண்டும் அறியாமையே உளதல்லது அறிவென்பதொன்று இலதென்றும் அவர் ஆரவாரவுரை நிகழ்த்துவரேனும். அறிவென்பது இன்றி எங்கும் அறியாமையே யுண்டென்னுந் தமது அக் கொள்கை யானது அறிவையே அவாவி நிற்கும் மக்களின் மனவியற்கைக்கு முழுதும் மாறாய்நின்று எவரானும் ஏற்றுக்கொள்ளப் படாமை கண்டு, தாமும் அறிவை நாடுவார்போன்று அறிவுநூற்கல்வி

|

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/226&oldid=1587673" இலிருந்து மீள்விக்கப்பட்டது