பக்கம்:மறைமலையம் 22.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1

211

வடமொழி நிகண்டுகளில் அறியக்கிடத்தலானும், திருக் கைலாயத்தில்

இறைவனைத்

6

அதற்கு முதற்பொருளாகக்

தொழவந்தவர்களை ன்னவரென்று இறைவற்குத் தெரிவித்துப் பின்னர் உள்ளே புகுத்துந் தூதுவர் கடமையும் மேற்கொண்டு அங்கே வாயில் காவலனாய் நிற்போன் நந்திதேவனாகலிற் ‘குடமுழா’ இயக்கும் நந்தியத் தலைவனைத் தூதுவனாய்ப் பெற்றான்' என்பதே அச் சொற்றொடர்க்குப் பொருளாமா லெனின்; ‘வாசகன்' என்னும் சொல்வழக்கையும், அதனை வழங்கிய ஆசிரியன் கருத்தையும் ஆய்ந்துணராது, அகராதியில் ஒரு பொருளைக் கண்டவள வானே அதனைத் தமது கொள்கையை நாட்டுதற்கு உதவியாக வெடுத்துக்கொண்டு கைகொண்ட மட்டும் எழுதி விடுவது நுண்ணறிவினார் கழகத்தில் ஏறாது. ‘வாசகன்' என்னும் சொல்லுக்கு ‘உரைவல்லான்' என்னும் பொருளே வடமொழிக் கண்ணும் பரவி வழங்குவதாகும்: 'தூதுவன்' என்னும் பொருள் எங்கோ அருகி வழங்குவது. சிவராமன் என்பார் எழுதிய வடமொழியகராதியிலும் ‘உரைவல்லான்' என்னும் பொருளே காட்டப்பட்டிருக்கின்றது; தூதுவன்' என்னும் பொருள் அருகிய வழக்காய் இருத்தலின் அது நான்காவதாக இறுதியில் வைத்துரைக்கப்பட்டிருக் கின்றது, வடமொழிச் சொல்லாகிய ‘வாசக' என்பது தமிழில் வந்து 'வாசகன்' என வழங்குங்கால். அது வடமொழியிற் பெருகிய வழக்காய்க் குறிக்கும் ‘சொல்வல்லான்' என்னும் பொருளையே தருவதன்றி, வடமொழிக்கண் யண்டோ ஓரிடத்து அருகிய வழக்காய்க் குறிக்கும் ‘தூதுவன்’ என்னும் பொருளைத் தராது. 'வாசக' என்னும் ஆண்பாற்சொல் 'மொழிவல்லான்' என்னும் பொருளையே முதன்மையாய்ச் சுட்டுவதேன் என்றால்; அது தோன்றிய 'வாசக' என்னும் உரிச்சொல்லும் அதன் முதனிலையும் 'சொல்' என்னும் பொருளையல்லாமல், ‘தூது' என்னும் பொருளைத் தருவன அல்ல; அதனால், வாசகன்' என்னுஞ் சொல்லுக்கு 'மொழிவல்லான்' என்னும் பொருளே பெருகிய வழக்காய் வழங்கும் உரிமை இயற்பொருளாயிற்று; 'தூதுவன்’ என்னும் பொருளோ அருகி வழங்கும் ஆகுபெயர்ப் பொருளாயிற்று.

6

ஒரு மொழியிற் பிறமொழிச் சொல் ஒன்று வந்து வழங்குங்கால், அப் பிறமொழியில் அது பெருகிய வழக்காய்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/244&oldid=1587691" இலிருந்து மீள்விக்கப்பட்டது