பக்கம்:மறைமலையம் 22.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

66

4. சிவனடியார் பலர் திருத்தொண்டத்

தொகையிற் கூறப்படாமை

இனி, இறைவன் றந்த திருமுகப்பாசுரம் பெற்றுச் சென்ற பாணபத்திரர் திருஞானசம்பந்தப் பிள்ளையார் காலத்திற்கும் முற்பட்டவராவதென்பதனை ஒரு சிறிது விளக்குவாம்; திருஞானசம்பந்தப் பெருமான் திருவாலவாயில் அருளிச்செய்த ‘ஆலநீழல் உகந்த” என்னுந் திருவியமகப் பதிகத்தில் “நக்கமேகுவர்” என்னுந் திருவியமகப் பதிகத்தில் “நக்கமேகுவர் என்னுஞ் செய்யுளில் “தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே’ என்று பாணபத்திரர் பொருட்டு இறைவன் இசைபாடினமை அறிவுறுத்தருளினார். 'தாரம்' என்பது குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்னும் ஏழிசையுள் முதற்றோன்றும் சையாகும். "இக் குரன் முதல் ஏழினும் முற்றொன்றியது தாரம்" என்றார் அடியார்க்கு நல்லாரும்.' இஃது அவ் வுரைகாரர் எடுத்துக்காட்டிய,

“தாரத்துள் தோன்றும் உழையுழை உள்தோன்றும் ஒருங் குரல்குரலின் உள்தோன்றிச் - சேரும் இளி உட்டோன்றுந் துத்தத்துள் தோன்றும் விளரியுட் கைக்கிளை தோன்றும் பிறப்பு”

என்னும் பழம்பாட்டினாலும் நன்கறியப்படும். இத் 'தாரம்' என்னுஞ்சொல் ஆகுபெயராற் சாதாரிப் பண்ணினை உணர்த்தும் என்று யாங் கூறியதனை இடர்ப்படுபொருள் என்று கூறினாரும் உளர். அணுக்கப்பொருளில் வரும் ஆகுபெயர்க்கும், அகன்ற பொருளில்வரும் ஆகுபெயர்க்கும் வேறுபாடு காணும் இலக்கணவறிவு தமக்கு இல்லாமையின், அவர் யாம் உரைத்த பொருளை இடர்ப்படுபொருள் என்றார். அவர் இலக்கணவறிவு நிரம்பப் பெறாதவர் என்பதற்கு அவரது ‘தமிழ்வரலாற்’றில் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/263&oldid=1587710" இலிருந்து மீள்விக்கப்பட்டது