பக்கம்:மறைமலையம் 22.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

  • மறைமலையம் 22

பொருளுரைப்பினும் அன்றித் தாரமாகிய இசையென்றே பாருளுரைப்பினும் அஃது இசையென்னும் பொருளிற் றீர்ந்து நில்லாமை காண்க. ஆகவே, அஃது இடர்ப்படு பொருளாதல் யாண்டையதென்க.

சையிலக்கண

2

பாரு

இனித் னித் 'தாரம்' என்பதற்கு எவ்வகையான ளுரைத்தல் ஆக்கியோன் கருத்துக்கு இயைந்ததா மென்பதனை ஆராய்ந்து காண்பாம். தாரம் என்னும்சொல் தமிழினும் உளது; வடமொழியினும் உளது. திருஞான சம்பந்தர்க்கு முற்பட்ட பழைய தனித்தமிழ் இலக்கியங்களில் எல்லாம் ‘தாரம்’ என்னுஞ் சொல்லுக்குப் ‘பல பண்டம்' என்னும் பொருளும், ஏழிசையுள் உரத்த ஒலி' என்னும் பொருளுமே காணப் படுகின்றன. இவ்விரண்டும் பொருளிற் ‘பலபண்டம்' என்னும் பொருள் வடமொழியில் உள்ள ‘தாரம்' என்னுஞ் சொல்லுக்குக் காணப்படாமையின், அப் பொருளை யுணர்த்தும்வழி, அது தனித் தமிழ்ச் சொல்லாதல் பெறுதும். இனி, ஏழிசையுள் உரத்த ஒலியை உணர்த்தும் 'தாரம்' என்னுஞ்சொல் வடமொழிக் கண் உளதாயினும், இசையின் இலக்கணங்க ளெல்லாந் தமிழ் நூல்களிலிருந்தெடுத்தே வடமொழிக்கண் எழுதப்பட்டன வன்று வடமொழிக்கண் முதன் முதல் இயற்றப்பட்ட கூறுதலின், ஏழிசையில் உரத்த லி யையுணர்த்தும் 'தாரம்' என்னுந் தமிழ்ச் சொல்லே வடமொழிக்கண்ணுஞ் சென்ற தென்பது தெளியப்படும். இனி. இச்சொல் உரத்த ஓசையை யுணர்த்துமிடத்தும் ஏழிசையுள் ஒன்றாகிய உரத்த ஓசையை யுணர்த்தி வருதலே பழைய தமிழ்நூல்களிற் காணப்படுகின்ற தல்லாமல், உலகத்தில் நிகழும் னை உரத்த ஒலிகளை உணர்த்துதல் அவற்றிற் காண்கின்றிலம். அவ்வாறாகவும், எதிர்ப்பக்கத்தவர், ‘இறைவன் இடைவெளியில் உரத்த வோசை யெழுப்பி நீலகண்ட யாழ்ப்பாணர்க்குப் பொற்பலகை இடுவித்ததனை உணர்த்தாதோ?' என்று அச் சொல்லுக்கு இவ்வளவு பொருளும் வலிந்து கொண்டார். இசையுள் ஒன்றை உணர்த்தும் அச்சொல் சாதாரிப் பண்ணுக்கு ஆம் என்ற எமதுரைப்பொருளை இடர்ப்படு பொருள் என்று குற்றங் கூறிய இவர், 'தாரம்' என்னுஞ் சொல்லுக்குப் பழைய நூல்களிற் காணப்படாத பொருள் களையெல்லாந் தமக்குத் தோன்றியவாறு புகுத்தித் தம் மனம்போனபடி யுரைக்கும்

நூல்

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/265&oldid=1587712" இலிருந்து மீள்விக்கப்பட்டது