பக்கம்:மறைமலையம் 22.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

  • மறைமலையம் - 22

யிருந்து பாடினமையால், மழை பெய்தாலும் அதனால் அவர் இடர்ப்பட்டிரார். அங்ஙனமிருக்க, நிலத்தின் ஈரம்தாக்கி அவரது யாழ் கட்டுவிட்டுப் போமென்று இறைவன் பொற்பலகை இடுவித்தானென்பது யாங்ஙனம் பொருந்தும்? அற்றன்று, மழை பெய்யவில்லை யாயினும், நிலததின்மேல் வைக்கப்பட்ட அவரது யாழ் அந் நிலத்தின் குளிர்ச்சி தாக்கிக் கட்டழியுமென்று அங்ஙனம் பொற்பலகை இடுவித்தான் என்னாமோவெனின்; என்னாம்; நிலத்தின்கண் உள்ள குளிர்ச்சி யாழின்கட்டை யழிக்க வல்ல அத்துணை ஆற்றலுடையதன் றாகலானும். அங்ஙனம் அழிக்க வல்லதாயின் இஞ்ஞான்றும் நிலத்தின் மேல் வைத்து இயக்கப்படும் வினையும் அதுபோலவே அதனாற் கட்டழிக்கப்படுதல் வேண்டுமாகவும் அவ்வாறு நிகழக் காணாமையானும், நீலகண்ட யாழ்ப்பாணர் இதற்கு முன்னெல்லாம் தமது யாழை நிலத்தின்மேல் வைத்துப்பாடி வந்திருக்க அப்போதெல்லாம் நிலத்தட்பத்தாற் கட்டுநெகிழாத அவ் யாழ் இப்போது மட்டும் அதனாற் கட்டுவிடுமெனக் கருதல் பொருந்தாமையானும் வெப்பத்தால் ஒன்றன்கட்டு நெகிழ்க காண்டுமே யன்றித் தட்பத்தால் அது நெகிழக் காணாமை யோடு அதற்கு மாறான கட்டின் இறுக்கமே நிகழக் காண்டலானும், நில ஈரம் படாமைப் பொருட்டுப் பலகை இடுவித்தான் என்னும் இவ் வரலாறு ஒரு சிறிதும் பொருந்தாப் பொய்யுரையாமெனவே புலனாகின்றது.

ஆகவே, திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவன் பொற்பலகை இடுவித்ததாகக் கூறும் 'பெரியபுராணச்' செய்யுட்கள் இரண்டும், பாணபத்திரர்க்கு இறைவன் பொற்பலகை இட்டாற்போற் றிருநீலகண்ட யாழ்ப் பாணர்க்கும் இட்டான் எனக் கூறவிழைந்த எவராலோ மாற்றிச் சேர்த்துவிடப்பட்டனவா மல்லது, ஆராய்ச்சியில் வல்ல அருளாளரான ஆசிரியர் சேக்கிழாராற் செய்யப்பட்டனவல்ல வென்க. இதனாலன்றோ, நம்பியாண்டார் நம்பி அருளிச்செய்த திருத்தொண்டர் திருவந்தாதி’ திருநீலகண்ட யாழ்ப்பாணர் வரலாறு கூறுகின்றுழி அவர்க்கு இறைவன் பொற்பலகை இடுவித்ததாக ஏதும் உரைக்கின்றிலது.பாணபத்திரர் கோயில் வாயிலின் புறத்தே இராப்பொழுதிற் பெருமழையினுங் காற்றினும் வருந்தியபடியாய் அன்பின் மாறாது இசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/273&oldid=1587720" இலிருந்து மீள்விக்கப்பட்டது